Published : 19 Nov 2018 09:31 AM
Last Updated : 19 Nov 2018 09:31 AM
விரைவு தகவல் குறியீடுகளுடன் (QR CODE) கூடிய அடையாள அட்டை ஒண்டிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட் டுள்ளது.
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள ஒண்டிக்குப்பம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரி யர்கள் கல்வி போதிக்கின்றனர்.
ஒண்டிக்குப்பம் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் பிள்ளை களின் ஆரம்பக் கல்வி தேவையை பூர்த்தி செய்துவரும் இப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு இணை யாக பல்நோக்கு மற்றும் மெய் நிகர் வகுப்பறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உருமாறி வருகிறது. இந்நிலையில், தற்போது இப் பள்ளியின் 4-ம் வகுப்பு மாணவர் களுக்கு விரைவு தகவல் குறியீடுகளுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளியின் 4-ம் வகுப்பு ஆசிரியர் கோபிநாத் கூறியதாவது:
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்து, ஆசிரியராக உயர்ந்தவன் நான். எனவே, தனியார் பள்ளி மாணவர்கள் கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் மூலம் பெறும் கல்வி, நவீன வசதிகள் நான் பணியாற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன்.
அந்த விருப்பத்தை படிப்படி யாக நிறைவேற்றும் நோக்கில், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, கடம்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் ரகுபதி, எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோரின் ஒத்துழைப்போடு, முதல் கட்டமாக என் வகுப்பறையை, என் சொந்த பணத்தில், இணைய தள வசதியுடன் கூடிய 6 கணினிகள், திறன் பலகை உள்ளிட்டவை அடங்கிய பல்நோக்கு மற்றும் மெய்நிகர் வகுப்பறையாக (Smart class) மாற்றியுள்ளேன்.
ஸ்கேன் செய்தால் தகவல்கள் கிடைக்கும் வகையில், விரைவு தகவல் குறியீடுகளுடன் தமிழ்ப் புலவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகளின் உருவப் படங்கள், மனித உடல் உறுப்புகள், சூரியக் குடும்பம் ஆகியவற்றின் ஓவியங்கள் வகுப்பறையின் 4 சுவர்களில் வரையப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது, 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 22 பேருக்கு விரைவு தகவல் குறி யீடுகளுடன் (QR CODE) கூடிய அடையாள அட்டையை தயாரித்து வழங்கியுள்ளோம். இந்த அடை யாள அட்டையின் முன்புறத்தில் மாணவரின் சுயவிவரங்கள் அடங் கிய விரைவு தகவல் குறியீடு, பின்புறத்தில், கருப்பு, பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய 4 நிறங் களில் விரைவு தகவல் குறியீடு கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த குறியீடுகளை கணினி, அலைபேசி மூலம் ஸ்கேன் செய் தால் பள்ளியின் வலைப்பூக்கள், யூ டியூப் அலைவரிசை மற்றும் வீட்டுப் பாட விவரங்கள், மாதிரி வினாத்தாள்கள், மாணவ-மாணவி களின் தனித் திறன்கள் உள்ளிட்ட வற்றை அறிந்து கொள்ளலாம்; மாணவ-மாணவிகள் தங்கள் பாடத் துக்கு தொடர்புடைய வார்த்தை விளையாட்டுகளை விளையாட லாம். விரைவு தகவல் குறியீடு களுடன் கூடிய அடையாள அட்டை களை மற்ற வகுப்பு மாணவர் களுக்கும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT