Last Updated : 10 Nov, 2018 08:39 AM

 

Published : 10 Nov 2018 08:39 AM
Last Updated : 10 Nov 2018 08:39 AM

மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 9 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே மருத்துவ சான்று: அரசு திட்டங்களை பெற முடியாமல் 12 வகையான மாற்றுத் திறனாளிகள் தவிப்பு

மத்திய அரசு சட்டம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழகம் முழுவதும் 9 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதால் அரசு திட்டங்களைப் பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தவித்து வரு கின்றனர்.

இலவச பஸ் பாஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட அரசு நல திட் டங்களைப் பெற மாற்றுத்திறனாளி கள் தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் 2 முறை மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் முகாம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தலைமை மருத்துவமனையில் நடைபெறும்.

இந்த முகாமில் மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப் படும். இந்தநிலையில், மாற்றுத்திற னாளிகள் உரிமை சட்டம் 2016-ன் படி 21 வகையான மாற்றுத்திற னாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட தமிழகம் முழுவதும் கண் பார்வையற்றோர், காது கேளா தோர், மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிக்கப்பட்டோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட 9 வகையான மாற்றுத்திறனாளி களுக்கு மட்டுமே மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் சட்டப்படி மீதமுள்ள அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வளர்ச்சி குன்றியவர்கள், பேச்சு மற்றும் மொழி குறைபாடுடையவர் கள், ரத்த அழிவு சோகை, பார்க் கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் உள்ளிட்ட 12 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத் துவ சான்றிதழ் வழங்குவதில்லை.

இதனால், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் அரசு சார்பில் கிடைக்க வேண்டிய எந்த சலுகைகளும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, டிசம்பர் 3-மாற்றுத்திறனாளிகள் தினம் இயக்கத்தின் மாநிலத் தலைவர் தா.மி.நா.தீபக் கூறியதாவது:

சட்டம் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்றுவரை 9 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே மருத்துவ சான்றிதழ் வழங்குகின் றனர். மீதமுள்ள 12 வகையான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழைப் பெற முடியாததால் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

இதனால், திருமண உதவி தொகை, மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள எந்த சலுகைகளையும் பெற முடி யாமல் தவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுகாதார துறையின் அலட் சிய போக்கினால் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம். மத்திய அர சின் சட்டத்தின்படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத் துவ சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

‘‘மத்திய அரசின் சட்டப்படி 21 வகையான மாற்றுத்திறனாளி களுக்கும் மருத்துவ சான்றிதழ் வழங்கும்படி உத்தரவிடப்பட் டுள்ளது. இது தொடர்பான, ஆணை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, விண்ணப்பங்கள் தயார் செய்வது, மாற்றுத்திறனாளி களுக்கான குறியீடுகள் தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றி தழ் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x