Published : 26 Nov 2018 08:33 AM
Last Updated : 26 Nov 2018 08:33 AM

பழைய நிலைக்கு மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்: வேதாரண்யம் பகுதி பெண்கள் கண்ணீர்

புயலின் பாதிப்பில் இருந்து வேதாரண்யம் பகுதி மக்கள் மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க கூறினார்.

கஜா புயலின் தாக்கத்தால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஏராளமான குடிசை வீடுகள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தை அடுத்த மறை ஞாயநல்லூர் கிராமத்தில் மட்டும் சுமார் 1,800 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் முகாம்களில் தங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக அந்த கிராமத் தைச் சேர்ந்த மணியன் மனைவி சரோஜா கூறியதாவது: ‘‘எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட வர். நான் பூ வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டது. நாங்கள் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். நிவாரணம் கொடுத்தால்தான் வீட்டை சீர மைக்க முடியும். நாங்கள் தற்போது முகாமில் சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டில் தங்கியுள்ளோம்’’ என்றார்.

வேதாரண்யம் - திருத்துறைப் பூண்டி சாலையில் நிலக்கடலை வியாபாரம் செய்யும் சேகர் கூறிய தாவது: ‘‘குஜராத்தில் இருந்து 1500 விதைக் கடலை மூட்டைகளை தலா ரூ.4 ஆயிரம் வீதம் வாங்கி குடோனில் வைத்திருந்தேன். கடந்த 16-ம் தேதி வீசிய புயலில் 100 மூட்டைகள் நனைந்து நாசமாகி விட்டதால் எனக்கு ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

வேதாரண்யத்தில் தற்போது சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங் களை அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தின்கீழ், சாலை, தெருக் களில் உள்ள குப்பையை சுத்தம் செய்வது, முறிந்து விழுந்துள்ள மரங்களை வெட்டுவது போன்ற பணிகளில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

100 நாள் வேலை

இதுகுறித்து மருதுார் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த வேலம்மாள் கூறியதாவது: ‘‘ஊரே அழிந்ததுபோல புயல் நாசம் செய்துவிட்டு போய்விட்டது. வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வர்கள் பழைய நிலைக்கு மீண்டு வர இன்னும் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். ஆடு, மாடுகள் எல்லாம் இறந்துவிட்டன. முகாமில் உணவு கொடுக்கிறார்கள். மற்ற செலவுகளுக்கு வழி இல்லை. தற்போது 100 நாள் வேலை கொடுத்துள்ளது கொஞ்சம் நிம்மதி அளிக்கிறது’’ என்றார்.

ஆயக்காரன்புலம் 3 கிராமத்தில் உள்ள நாடிமுத்து உதவி நடு நிலைப்பள்ளி மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஓடுகளை முழுமையாக மாற்றினால்தான் பள்ளி தொடங்கும் என்ற நிலை உள்ளது. இதுகுறித்து அப்பள்ளி யில் படிக்கும் மாணவர் குமரனின் தாயார் பத்மா கூறியதாவது: ‘‘புயலால் வீடு சேதமடைந்துள்ளது. முகாமில்தான் தங்கி உள்ளோம். பள்ளிக் கட்டிடத்தில் ஓடுகள் எல்லாம் உடைந்து விட்டன. ஓடுகளை மாற்றினால்தான் பள்ளி செயல்படும் நிலை உள்ளது. இத னால், குழந்தைகளின் படிப்பும் வீணாகி கொண்டிருப்பது வேதனை யாக இருக்கிறது’’ என்றார்.

அரசு முழு கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் பணி யாற்றினால்தான் ஓரளவுக்காவது பாதிப்பில் இருந்து மீள முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x