Last Updated : 20 Nov, 2018 08:22 AM

 

Published : 20 Nov 2018 08:22 AM
Last Updated : 20 Nov 2018 08:22 AM

கடும் புயலிலும் கர்ப்பிணிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

காரைக்கால் அரசு மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எஸ்.விக்டர் ஜான்பால் (33). தற்காலிகமாக நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற் றுகிறார். இவர் கடந்த 15-ம் தேதி இரவு 11 மணி அளவில் சூறைக் காற்றுடன் கனமழை கொட்டிய நேரத்தில், தன் உயிரை பணயம் வைத்து இரு கர்ப்பிணிகளை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:

அன்றைய தினம் நெடுங்காடு சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ள தமிழகப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியை சிரமப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனை யில் கொண்டு சேர்த்துவிட்டு நெடுங்காடு திரும்பினேன்.

அடுத்த வினாடியே நெடுங்காடு குரும்பகரம் மத்தளங்குடி பகுதி யில் வலியால் துடிக்கும் ஒரு கர்ப்பி ணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என போன் வந்தது. உடனே புறப்பட் டேன். பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்ததால் மாறி மாறி வெவ்வேறு வழிகளில் அவரது வீட் டுக்கு சென்றேன். அவரை ஆம்பு லன்ஸில் ஏற்றிக்கொண்டேன். அவரது உறவினர்கள் 2 பேரையும் வாகனத்தின் பின்னால் வருமாறு கூறினேன்.

காற்று வீசிக் கொண்டிருந்தது, வழி நெடுகிலும் மரங்கள் விழுந்து கிடந்தன. ஊருக்குள் உள்ள மாற்று வழிகளில் எல்லாம் புகுந்து சென் றேன். ஆங்காங்கே கிடந்த மரங் களை பின்னால் வந்த உறவினர் கள் வந்து அகற்றி பாதை அமைத் துக் கொடுத்தனர். பாதை சரியில் லாமல் நீண்ட நேரம் சுற்றிச் சுற்றி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துவிட்டேன். அவர்கள் இரு வருக்கும் நல்லபடியாக குழந்தை பிறந்த தகவலை கேட்டதும், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மருத்துவர்கள் தொடர் பில் இருந்தவாறு ஆலோசனை வழங்கியபடி இருந்தனர். ஆம் புலன்ஸ் ஓட்டுநர், மாவட்ட நிர்வா கம், மருத்துவர்கள் அனைவருக் கும் நன்றி என்று கர்ப்பிணியின் உறவினரும் வழக்கறிஞருமான ஜேசுராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x