Last Updated : 17 Nov, 2018 08:51 AM

 

Published : 17 Nov 2018 08:51 AM
Last Updated : 17 Nov 2018 08:51 AM

நடைமுறைக்கு சாத்தியமில்லாத உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளால் பட்டாசு தொழிற்சாலைகளை மூடுகிறோம்: சிவகாசியில் உரிமையாளர்கள் அறிவிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுகளால் பட்டாசு ஆலைகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலைகளை மூடுவதாகவும், தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய பணப்பலன்களைப் பெற் றுக்கொள்ள விண்ணப்பிக்குமாறும் பட்டாசு ஆலைகள் அறிவித்துள் ளன.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2015-ம் ஆண்டில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு கடந்த 23 மற்றும் 31-ம் தேதிகளில் வெளி யிடப்பட்டது.

அதில், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை இல்லை என்றும், ஆனால், பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன் படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதோடு, இனி அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கடந்த தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளை யும் திறக்க முடியாத சூழ்நிலைக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக பட்டாசு ஆலைகளை மூடுவதாகவும், தொழிலாளர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களைப் பெற விண்ணப்பிக்குமாறும் பட்டாசு ஆலைகள் அறிவிப்பு வெளியிட்டு, ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளின் கேட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

அதில், "முன் எப்போதும் இல் லாத அளவுக்கு தொழிற்சாலையை நடத்த முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தின் 23.10.2018 மற்றும் 31.10.2018 ஆணையில் கூறப்பட்டுள்ள நடை முறைக்குச் சாத்தியமில்லாத நிபந்தனைகளால் இந்த தொழிற் சாலை காலவரையின்றி மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தாங்கள் தங்களுக்குச் சேர வேண் டிய பணிக்கொடை மற்றும் இதர பயன்களைப் பெற விண்ணப்பிக் கலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டாசு உரிமை யாளர்கள் சிலர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு களால் பட்டாசுத் தொழில் நசுக்கப் பட்டுள்ளது. இதனால் ஆலையைத் திறந்து உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம். உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்களுக்கும் உரிய ஊதியத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலையை மூடுவதாக அறிவித்து தொழிலாளர்கள் தங்களுக்குரிய பணப்பலன்களை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித் துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x