Published : 27 Nov 2018 09:42 AM
Last Updated : 27 Nov 2018 09:42 AM
சென்னை
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவா ரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் னெச்சரிக்கை, நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் சுகாதாரத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எவ் வித கட்டணமும் இன்றி எடுக்கப் படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வராத நோயாளிகளுக்கு குறைந்த பட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், புயலால் பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பைத் தொடர்ந்து, இதுவரை 7,196 மருத்துவ முகாம் கள் மூலம் 4 லட்சத்து 69 ஆயி ரத்து 596 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 21 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட் டுள்ளது.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலம் 432 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 83,850 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 2,643 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சீரமைப்பு பணிகள் முடிந்து, வழக்கம்போல பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT