Published : 14 Apr 2014 12:00 AM
Last Updated : 14 Apr 2014 12:00 AM

சென்னையில் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்த அதிமுக, திமுக கவுன்சிலர்கள்: வேலைக்கு ஆட்கள் வைத்து வழிப்பறி செய்தது அம்பலம்

அதிமுக, திமுக கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. இருவரும் இணைந்து வேலைக்கு இளைஞர் களை வைத்து வழிப்பறி செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி பாரி வாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமாபதி, சில நாட்களுக்கு முன்பு போரூரில் ஒரு பயணியை இறக்கி விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காட்டுப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் அருகே 3 பேர் திடீரென ஆட்டோவை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 3 சவரன் செயின், ரூ.500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் ஆய்வாளர் ரியாசுதீன் விசாரணை நடத்தி ஜெயக்குமார், ராஜா என்ற 2 பேரை கைது செய்தார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காட்டுப்பாக்கம் ஊராட்சி 12-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜெயக்குமார், 10-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜா இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அரசியலில் எதிரிக் கட்சிகளாக இருக்கும் அதிமுக, திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஒன்றாக சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஆய்வாளர் ரியாசுதீனிடம் கேட்டபோது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அருகருகே உள்ள வார்டுகளில் கவுன்சிலர்களாக இருந்ததால் ஜெயக்குமார், ராஜா இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் தனித்தனியே வழிப்பறி செய்து வந்தனர். கவுன்சில ரான பிறகு இருவரும் சேர்ந்து பெரிய அளவில் வழிப்பறி செய்ய திட்டமிட்டு செயல்பட்ட னர். இதற்காக வியாசர்பாடி, திரு வள்ளூரில் இருந்து 10-க்கும் மேற் பட்ட இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வழிப்பறி, திருட்டில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுத்தபோது, கவுன்சிலர்கள் இருவரும் அந்த மையத்தில் அமர்ந்து கொண்டு, அங்கு வரும் பெண்களை நோட்டமிட்டுள்ளனர். அதிகமாக நகை அணிந்து வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் எந்த வழியாக வேலைக்கு, வீட்டுக்கு செல்வார்கள் என்பதை தெரிந்து கொள்வர்.

பின்னர், தங்களது ஆட்களுக்கு தகவல் கொடுத்து, அந்தப் பெண்ணிடம் வழிப்பறி செய்ய அனுப்புவார்கள். இதேபோல பல பெண்களிடம் செயின் பறிக்கப் பட்டுள்ளது.

கவுன்சிலர் என்பதால் பலரிடம் நல்ல முறையில் பழகுவர். யார், யார் வீட்டில் நகை, பணம் வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்வார்கள். அந்த வீ்ட்டில் ஆள் இல்லாத நேரத்தில் ஆட்களை அனுப்பி, பூட்டை உடைத்து திருடி வரச் சொல்வார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் குழந்தை களை அழைத்துவர பள்ளிக்கு செல்வதுண்டு. அந்த நேரத்தை யும் தெரிந்து வைத்துக் கொண்டு, வீட்டுக்குள் புகுந்து திருடியுள்ளனர். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிக நகை வைத்திருப் பார்கள் என்பதால், அவர்கள் வீட்டை குறி வைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

உள்ளூரில் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளுக்கும் தொழிலை விரிவுபடுத்திவிட்டனர். தாம்பரம், பல்லாவரம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆட்களை அனுப்பி கொள்ளையடித்துள்ளனர். பல இடங்களில் ஜெயக்குமாரும், ராஜாவும் சேர்ந்தே வழிப்பறியிலும் திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் வேலை செய்யும் அனைவரும் 20 முதல் 23 வயது வரையுள்ள இளைஞர்கள்தான். அவர்கள் திருடிக் கொண்டு வந்து தரும் நகைகளை கவுன்சிலர்கள் இருவரும் மொத்தமாக சேர்த்து, ஆந்திர எல்லையான தடா பகுதி யில் விற்று பணமாக்கி விடுவார் கள். அதில் ஒரு பங்கை இளைஞர் களுக்கு கொடுப்பார்கள்.

இவர்களிடம் ‘வேலை’ பார்த்த வழிப்பறி கொள்ளையர்களான முத்துக்குமார், பிரதீப், தினேஷ் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இதுவரை 15 வழக்குகளில் முடிவு கிடைத் துள்ளன. மேலும் சிலர் தலைமறை வாக உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு ஆய்வாளர் ரியாசு தீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x