Published : 21 Nov 2018 08:33 AM
Last Updated : 21 Nov 2018 08:33 AM
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடும் பொருளாதார அழிவை சந்தித்துள்ளன. மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கஜா புயலால் டெல்டா மாவட் டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக் கோட்டை மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சா வூர் மாவட்டத்தில் அதிராம்பட்டி னம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதியில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பகுதியில் உள்ள பெரும் பான கிராமங்களில் வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன. குடிசை வீடு கள் தரைமட்டமாகி உள்ளன. இதேபோல மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் வீடுகளைச் சுற்றிலும் இருந்த தென்னை, மா, பனை, புளிய மரங்கள் வேரோடு சாய்ந்துள் ளன. அதிராம்பட்டினம், மல்லிப் பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகள், வலைகள் முற்றிலும் சேதம் அடைந் துள்ளன. கடல்நீர் புகுந்ததால் விளைநிலங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.
இப்பகுதியின் முக்கிய ஆதார மான தென்னை முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமங் களிலும் மக்கள் இந்த புயலால் கடும் பொருளாதார அழிவை சந்தித்துள்ளனர். இதனால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்கதியாக உள்ளனர்.
பல கிராமங்களில் வீடுகளின் மீது விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. ஏராளமான குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களுக்கு செல்வதற்குகூட இயலாத வகையில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. பல இடங்களில் கிராம மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வர வில்லை என்றும், உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என்றும் பொது மக்கள் வேதனை தெரிவிக்கின் றனர். பல கிராமங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களும் கிடைக்கவில்லை. புயல் தாக்கிய 5-ம் நாளான நேற்றும் பெரும்பாலான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களும் தங்களை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங் கத்தில் உள்ளனர். பல கிராமங் களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தொடர்புகள் முடங்கிக்கிடக்கின்றன.
தஞ்சாவூர் நகரிலும் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங் கள் விழுந்து கடும் சேதம் ஏற்பட் டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல் லாமல் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தென்னை, வாழை, பலா, மா உள்ளிட்ட மரங்கள் பெருமளவு அழிந்துவிட்டன. கிராம பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கூட பல கிராமங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கடந்த 5 நாட்களாக மின்சார வசதி இல்லாததால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள் ளனர். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன் னார்வலர்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் நிவாரணங்கள் வழங்கப் பட்டு வருவது சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது என்கின்றனர்.
கஜா புயலுக்கு ஒவ்வொரு கிராம மும் கடுமையான பொருளாதார அழிவைச் சந்தித்துள்ளன. இதில் இருந்து மக்கள் மீண்டு வருவ தற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள், அர சியல் கட்சியினர் வலியுறுத்து கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT