Published : 19 Nov 2018 10:06 AM
Last Updated : 19 Nov 2018 10:06 AM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் மேல்மலை கிராமங்களில் சீரமைப்புப் பணிகளுக்கு அலு வலர்கள் செல்வதில் தாமத மானதையடுத்து கிராம மக்களே தங்கள் பகுதியில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வரு கின்றனர். பல கிராமங்களுக்கு இதுவரை மின்இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் இரு ளில் தவித்து வருகின்றனர்.
கஜா புயல் தாக்குதலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள், நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள், 10 மின்மாற்றிகள் சாய்ந்தன. இப்பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் சீரமைக்கும் பணியில் ஈடுபட் டுள்ளனர்.
முதல் கட்டமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டன. குருசரடி அருகே ஏற்பட்ட மண் சரிவும் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. பழநி சாலையில் பாறை விழுந்ததால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இச்சாலையில் நேற்று காலை முதல் போக்குவரத்து சீரானது.
பிரதான சாலைகளில் சீரமைப்புப் பணிகளை முடிக்க இரண்டு நாட்கள் ஆன நிலையில், மேல்மலை கிராமங்களில் பாதிப்புகளை கண்டறிந்து சீரமைக்க அலுவலர்கள் செல்வது தாமதமானது. இதனால் மலை கிராம மக்களே தங்கள் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர்.
மலை கிராமங்களுக்கு அலுவலர்கள் நேற்று காலை முதல் சென்று சீரமைப்புப் பணிகளை தொடங்கினர். உப்புப்பாறை மலை கிராமத்தில் அலுவலர்கள் தாமதமாக வந்ததாகக் கூறி பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மன்னவனூர், கவுஞ்சி உட்பட மேல்மலை கிராமங்களில் கடந்த இரு நாட்களாக மின்விநியோகம் இல்லை. இந்த கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
கொடைக்கானல் நகர் பகுதியில் 80 சதவீத மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சாய்ந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
நாளை இரவுக்குள் மேல்மலைப்பகுதிக்கு மின்விநியோகம் சீராகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் தங்கள் பணிகளை துரிதகதியில் முடித்து போக்குவரத்தை சீராக்கினர். மேலும் மண்ணில் உள்ள ஈரப்பதம் காரணமாக மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர்.
கொடைக்கானல் மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை சீராக இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். மின்வாரிய கோட்ட பொறியாளர் மேத்யூ தெரிவிக்கையில், வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாளை இரவுக்குள் மேல்மலை கிராமங்களில் மின்விநியோகம் சீராகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT