Published : 09 Oct 2018 07:56 AM
Last Updated : 09 Oct 2018 07:56 AM
ரயில்வே துறையில் ஓய்வுபெற்ற ஒரு லட்சம் பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளது என தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரயில்வேயில் நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பிரிவுகள் உட்பட ரயில்வேயின் பல்வேறு துறைகளில் மொத்தம் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள் ளன. இதற்கிடையே, ரயில் வேயில் காலியிடங்களை ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்பலாம் என்றும், புதிய ஆட்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணி யாற்றலாம் என்றும் ரயில்வே வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, வடக்கு, தென்மேற்கு, தெற்கு மத்திய உட்பட 16 ரயில்வே மண்டலங்களிலும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்ஜினீயரிங் பிரிவு, போர்ட்டர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், மின்பாதையில் பணியாற்றும் கலாசிகள், உதவி ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், மின் பிரிவு மற்றும் இயந்திரப்பிரிவு ஊழியர்களை நியமித்து வருகின் றன. நாடுமுழுவதும் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு மீண்டும் வேலை வழங்கப்படுள்ளது.
இவர்களுக்கு பணியில் இருக் கும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்தை வழக்கம் போல் தனியாக பெற லாம். ரயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கை பயணிகளின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா கூறும்போது, ‘‘ரயில் வேயில் ஓட்டுநர், கார்டு மற்றும் டிராக்மேன், பாயின்ட் மேன் போன்ற கடைநிலை பணியாளர் கள் பணிக்கு உடல் வலிமை முக்கியமானதாகும். ஓட்டுநர், கார்டு பணிக்கு கண்பார்வை மட் டுமல்லாமல், உடல்நிலையும் மனவலிமையும் முக்கியமான தாகும். இதை கருத்தில் கொண்டே ரயில்வே ஊழியர்கள் தனது 45 வயது அல்லது 50 வயதாகும்போது அவரது வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது. இந்த வாரிசு வேலைவாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தற்போது 60 வயதை கடந்தவர்களை கொண்டு ரயில்வே இயக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவது என்பது பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகை யில் இருக்கிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களை பணியில் நியமிக் காமல், ஓய்வு பெற்றோரை நியமிக் கும் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’’ என்றார்.
டிஆர்இயு செயல் தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் கிமீ தூரத்துக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 12 ஆயிரம் ரயில்களில் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ரயில்வேயில் மொத்தம் 2.45 லட்சம் காலிப்பணி யிடங்கள் உள்ளன. தற்போது, ஒரு லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதவிர, ஒரு லட்சம் காலி யிடங்களை ஓய்வு பெற்றவர் களைக் கொண்டு நிரப்பி வருகி றது. மற்றொரு புறம் பெரிய, பெரிய தனியார் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தடங்களில் ரயில் களை இயக்கவும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதில், உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் மட்டுமே இதுவரையில் 5 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட் டுள்ளது. இன்னும் 2 ஆயிரம் பேரை தேர்வு செய்யவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரயில்களை இயக்குவது பயணி களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும்’’ என்றார்.
நிர்வாகம் சொல்வதென்ன?
ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘போதிய அளவில் உடல் மற்றும் மருத்துவ பரி சோதனை செய்த பிறகே ஓய்வு பெற்றவர்களை பணிக்கு தேர்வு செய்கிறோம். புதிய ஆட்களை பணியில் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதால்தான் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள் ளது. புதிய ஆட்கள் சேர சேர தேர்வு செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT