Published : 20 Oct 2018 08:28 AM
Last Updated : 20 Oct 2018 08:28 AM

அரசு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி பற்றாக்குறை: சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியருக்கே கிடைக்காத நிலை 

அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி பற்றாக்குறையால் நோயாளிகளை அணுகும் மருத்துவர்கள், செவிலி யர்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாகப் பரவுகின்றன.

மதுரை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாரும் வரவில்லை. ஆனால், அதன் அறிகுறியுடன் வந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதுகுறித்து அரசு மருத்து வர்கள் கூறியதாவது: நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு டெங்கு, பன்றிக் காய்ச்சல் வருகிறது.

பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள், சர்க்கரை, ஆஸ் துமா, சிறுநீரக நோயாளிகளை வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச் சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் அதிக அளவு தாக்குகிறது. மதுரை அரசு மருத்துவ மனைக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வந்த 5 நோயா ளிகளைப் பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் இல்லை. அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போடுவதற்குக்கூட பன்றிக் காய்ச் சல் தடுப்பூசி இருப்பு இல்லை. நெல்லையில் டாக்டர் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தின ருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. நோயாளிகள் மூலம் மருத்து வர்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்தால் அவர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கும் பரவும். பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி ரூ.700 முதல் 900 வரை இருக் கும். இந்த ஊசியைப் பன்றிக் காய்ச்சல் வருவதற்கு முன் எல்லா நோயாளிகளுக்கும் போடு வதற்கு சாத்தியமில்லை. அதே நேரத்தில் பன்றிக் காய்ச்சல் மாத் திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் அரசு மருத்துவ மனைகளில் கிடைக்கிறது.

5 நாட்கள் தொடர்ந்து இந்த மாத்திரைகளை போட்டால் கிருமி இருந்தாலும் அது செத்துவிடும். முதல் 2 நாளில் இந்த மாத்தி ரைகளைச் சாப்பிட்டால் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகத் தடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் வராது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியனிடம் கேட்ட போது, ‘‘சுகாதாரத் துறையில் இருந்து ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் மருத்துவ மனைக்கு வந்துவிடும். அதன்பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் அந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். தற்போது வரை மருத்துவமனை யில் யாருக்கும் பன்றிக்காய்ச் சல் கண்டுபிடிக்கப்படவில்லை’’ என்றார்.

காய்ச்சல் வந்தால் ஓய்வெடுங்கள்

மழை சீசனில் தற்போது வரக்கூடிய வைரஸ் காய்ச்சல் 3 முதல் 5 நாட்களில் சரியாகி விடும். இதிலிருந்து பாதுகாக்க வீட்டை, பள்ளிகளை, பணிபுரியும் அலுவலக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து நிறைய குடிக்க வேண்டும். முடிந்த அளவு இருமல் இருப்பவர்கள் முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்வதால் வீட்டில் உள்ளவர்களைப் பாதுகாக்கலாம். இருமல், தும்மல், சளி, காய்ச்சல் வந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பெரியவர்களானாலும் ஓய்வெடுக்க வேண்டும். பொது இடங்களுக்கு காய்ச்சலுடன் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x