Last Updated : 31 Oct, 2018 08:06 AM

 

Published : 31 Oct 2018 08:06 AM
Last Updated : 31 Oct 2018 08:06 AM

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் எதிரொலி: தீபாவளி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க டிஜிபி உத்தரவு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் களைத் தொடர்ந்து தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை அனைத்து பகுதியிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடுவதாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இதை விசாரித்த நீதிபதிகள், தீபாவளி நாளில் இரவு 8 முதல் 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாளில் இரவு 11.55 முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண் டும். காற்று மாசு, ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய மற்றும் திடக்கழிவு பிரச்சினையுள்ள பட் டாசு வகைகளை தடை செய்ய வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பட்டாசு வகைகளை மட் டுமே விற்பனை செய்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண் டும்.

இணையதளங்கள் வாயிலாக பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பது கண்டறியப்பட் டால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். பட்டாசு வெடிப்பதில் எங்கேனும் விதிமீறல்கள் இருந் தால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலைய அலுவலரே பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான வழிகாட்டுதல்களை பிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து, டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடமிருந்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு 2 தினங் களுக்கு முன்பு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட் டுதல்களை சுட்டிக்காட்டி, அவற்றை டிஎஸ்பி, உதவி ஆணை யர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வாயிலாக தங்களது எல்லைக் குட்பட்ட பகுதிகளில் முழுமையாக, விழிப்புடன் கண்காணிக்க வேண் டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்காணிக்க தீவிர ரோந்து

இதுகுறித்து காவல் உயரதிகாரி கள் கூறும்போது, ‘‘அரசிடமிருந்து அறிவிப்பு வந்தவுடன், எந்த நேரத் தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண் டும் என்பது குறித்து பொதுமக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தீபாவளியன்று உச்ச நீதி மன்ற வழிகாட்டுதல்படி பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண் காணிக்க, அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களுக்கும் முழுமையாக ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x