Last Updated : 18 Oct, 2018 11:11 AM

 

Published : 18 Oct 2018 11:11 AM
Last Updated : 18 Oct 2018 11:11 AM

கடந்த 5 மாதங்களில் 11 ரூபாய்க்கு மேல் அதிகரிப்பு  பெட்ரோல், டீசல் போல ஆட்டோக்களுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையும் உயர்வு: ஆட்டோ கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று ஓட்டுநர்கள் தகவல்

பெட்ரோல், டீசல் விலையைப் போல ஆட்டோக்களுக்கான எல்பிஜி (எரிவாயு) விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 5 மாதங் களில் மட்டும் 11 ரூபாய் 38 காசுகள் உயர்ந்துள்ளன.

மக்கள் போக்குவரத்துக்காக பேருந்து, வேன், மேக்ஸி கேப், ஷேர் ஆட்டோ என எத்தனை இருந்தாலும் ஆட்டோக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த வாகனங்களில் இருந்து வெளி யேறும் கரும்புகை சுற்றுச்சூழலை பாதிப்பதாக புகார் கூறப்பட் டது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு

இதையடுத்து இந்த பாதிப் பைக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்தன. அதன் ஒருபகுதியாக பெட்ரோலில் இயங் கும் ஆட்டோக்களுக்குப் பதிலாக எல்பிஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, எல்பிஜி ஆட்டோக்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக் கிறது.

பெட்ரோல் ஆட்டோக்களை இயக்கியவர்கள் அதனை விற்று விட்டு புதிதாக எல்பிஜி ஆட்டோக் களை வாங்குவது அல்லது எல்பிஜி ஆட்டோக்களாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆட்டோக்களில் எல்பிஜி மட்டு மில்லாமல், திடீரென எரிவாயு தீர்ந்து விட்டால், அவசரத்துக்கு பெட்ரோ லில் இயங்கும் வசதியும் உள்ளது.

எல்பிஜி ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு எல்பிஜி பங்குகள் எண்ணிக்கை உயரவில்லை. இந் நிலையில், பெட்ரோல் போல எல்பிஜி விலையும் உயர்கிறது.

கடந்தாண்டு ஒரு கிலோ எல்பிஜி விலை, 38 ரூபாய் 92 காசுகளாக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 31 ரூபாய் 70 காசுகளாகக் குறைந்தது. டிசம்பரில் 43 ரூபாய் 43 காசுகளாக அதிகரித்தது. நடப்பு ஆண்டு மார்ச் மாதம் 40 ரூபாய் 48 காசுகளாகக் குறைந்தது. ஏப்ரல் மாதம் 38 ரூபாய் 74 காசுகளானது. அதன்பிறகு ஏறுமுகம்தான்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 11 ரூபாய் 38 காசுகள் அதிகரித் துள்ளது. இப்போது ஒரு கிலோ எல்பிஜி 50 ரூபாய் 12 காசுக்கு விற்கப்படுகிறது.

விநியோகத்தில் பாதிப்பு

“பெட்ரோல் விலை உயர்வு காரணமாக எல்பிஜி விநியோகத் தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் பரேஷனின் எல்பிஜி விநியோகம் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 19,300 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து லாரி லோடு வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு லாரி லோடுகள்தான் வந்தன” என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தட்டுப்பாடு இல்லை

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப் பரேஷனின் பெட்ரோல் பங்க் டீலர் 41-பேரும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க் டீலர் 26 பேரும், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேஷன் பங்க் டீலர் 24 பேரும் என மொத்தம் 91 பெட்ரோல் பங்குகளில் ஆட்டோக் களுக்கு எல்பிஜி வழங்கப்படுகிறது. ஐஓசியைப் பொறுத்தவரை எல்பிஜி தட்டுப்பாடு இல்லை” என் றார்.

இதுகுறித்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க (சிஐடியூ) மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்து 62 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில், 1 லட்சத்து 10 ஆயிரம் ஆட்டோக்கள் எல்பிஜியில் இயங்குகின்றன. சென்னையில் ஓடும் 86,000 ஆட்டோக்களில் 60,000 எல்பிஜியில் இயக்கப்படுகின்றன.

எல்பிஜி பங்க் அமைக்கும்போது அருகில் பள்ளிக்கூடமோ, 7 மாடிகளுக்கு மேல் உள்ள கட்டிடங்களோ இருக்கக்கூடாது,

பெட்ரோல் பங்குகளில் பெட் ரோல் டேங்குக்கும் எல்பிஜி டேங்குக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் சென்னை போன்ற மாநகரில் எல்பிஜி பங்குகளை அதிக எண்ணிக் கையில் திறக்க முடியவில்லை.

மானியம் வழங்கவில்லை

இதனால், மொபைல் கேஸ் விநியோகிக்கப்படும் என்று 2009-ம் ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. இதுவரை அதனை நடைமுறைப் படுத்தவில்லை. சென்னையில் 2009-ம் ஆண்டுடன் பெட்ரோல் ஆட்டோ பதிவு நிறுத்தப்பட்டது. பெட்ரோல் ஆட்டோக்களை எல்பிஜி ஆட்டோக்களாக மாற்றுவதற்கு ரூ.15,000 செலவாகும். அதில், ரூ.3,000 மானியமாக தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதையும் இதுவரை வழங்க வில்லை என்றார்.

“பெட்ரோல் விலை போல எல்பிஜி விலையும் அதிகரித் துள்ளதால் ஆட்டோ கட்டண உயர்வைத் தவிர்க்க முடிய வில்லை” என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x