Published : 30 Oct 2018 09:02 AM
Last Updated : 30 Oct 2018 09:02 AM
தீபாவளியையொட்டி இந்த ஆண்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில், சிவகாசியில் பல்வேறு பெயர்களில் புதிய பேன்சி ரகப் பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகாசி மற்றும் சுற்று வட்டா ரங்களில் உள்ள பட்டாசு ஆலை களில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், நாட்டின் ஒட்டுமொத்தத் தேவை யில் 90 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன. பட்டாசு உற்பத்தி மூலப் பொருட்களான அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட் ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலு மினியக் கம்பி, ஸ்பார்க்லர் போன்றவற்றை குறிப்பிட்ட சதவீதத் தில் கலந்து பலவிதமான பட்டாசு கள் சிவகாசியில் தயாரிக்கப் படுகின்றன.
இந்த ரசாயனங்களைப் பயன் படுத்தியே சப்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி எழுப்பும் பட்டாசு கள், இவை இரண்டும் இணைந்த வகை என 3 வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இதன் ஒவ்வொரு வகையிலும் சுமார் 250 முதல் 300 ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
மக்களிடம் பேன்சி ரக பட்டாசு களுக்கு வரவேற்பு உள்ளதால் தற்போது அந்தவகை பட்டாசுகளை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குறிப் பாக விசில் ஒலி எழுப்பும் பட்டாசு களும், மிக உயரத்தில் சென்று பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ வைக்கப்பட்ட பட்டாசு வகைகளும் தற்போது அதிக அளவில் விற்பனை யாகி வருகின்றன.
இதுகுறித்து, பட்டாசு விற்பனை யாளர் கணேஷ் கூறியதாவது: ‘‘ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களையே வாடிக்கையாளர்கள் கேட்டு வருகிறார்கள்.
அவர்களின் ஆர்வத்தையும், தேவையையும் பூர்த்திசெய் யும் வகையில் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ரக பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன.
இந்த ஆண்டு 100 மீட்டர் முதல் 300 மீட்டர் உயரம் வரை சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பீகாக் டான்ஸ், விசிலிங் ஷாட், கிராக்லிங் ஷாட், போட்டோ பிளாஸ், செல்பி ஸ்டிக், பீகாக் டெய்ல், ஜாஸ்மின் பிளவர், தண்டர் பேர்ட்ஸ், லூன்லிடியூன்ஸ், கிளாஸ்-ஆப் கிளாஸ், டிரம்பீட், மேஜிக் வாண்ட், ஸ்கை பெண்டன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இந்த ஆண்டு புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன.
இவை ரூ.50 முதல் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. அதோடு, 50 ஆயிரம் வாலா, 20 ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா போன்ற சரவெடிகளும் ஆர்டரின் பேரில் தயாரித்து கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் மிகுந்த சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசு ரகங்களைவிட, பேன்சி ரகங்களுக்கு அதிகம் வரவேற்பு உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT