Published : 05 Oct 2018 11:30 AM
Last Updated : 05 Oct 2018 11:30 AM

மயிலாப்பூர் அகில இந்திய சாய் சமாஜத்தில் சீரடி சாய் பாபாவின் மகா சமாதி நூற்றாண்டு விழா

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் சீரடி சாய் பாபாவின் மகா சமாதி தினம் வரும் 18, 19 தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

மயிலாப்பூர், அலமேலுமங்கா புரம் பகுதியில் அமைந்துள்ள அகில இந்திய சாய் சமாஜத்தில் சீரடி சாய் பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா செப். 27-ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். வரும் 18, 19-ம் தேதி ஆகிய இரு நாட்களும் சீரடி சாய் பாபாவின் மகா சமாதி நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதை முன்னிட்டு வரும் 18-ம் தேதி சென்னை மாநகர் முழுவதும் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று தசமி திதியில் பிறக்கும் 100 குழந்தைகளுக்கு பாபாவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்படும்.

அக். 19-ம் தேதி விஜய தசமி நாள் அன்று சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றில் அன்னதானம் வழங்கப்படும். மாலை 4 மணிக்கு மவுலி மொகைதீன் சாகுல் அமீது வழங்கும் திருக்குரான் ஓதுதல் நிகழ்ச்சி, 7-30 மணிக்கு பாபா மூர்த்தி நரசிம்ம சுவாமிஜி படத்துடன் மாட வீதிகளில் வீதியுலா நடைபெறும்.

இதுகுறித்து சாய் சமாஜத்தின் மேலாளர் சாய் செல்வன் கூறும் போது, “இந்த ஒரு மாதமும், தின மும் கர்நாடக சங்கீதம், பக்தி பாடல்கள், வாத்திய இசை, பஜன்ஸ், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் 18-ம் தேதி மதியமே தசமி திதி வந்து விடுவதால், இந்த ஆண்டு, 18, 19 ஆகிய இரண்டு நாட்களும் சாய் பாபாவின் மகா சமாதி நாள் அனுசரிக்கப்படுகிறது. அக். 22-ம் தேதி அரசு மருத்துவமனை களில் நோயாளிகளுக்கு லுங்கி, துண்டு, போர்வை, உணவு போன்றவை வழங்கப்படும்.

24-ம் தேதி பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியின் ஆராதனை விழா நிறுவனர் தினக் கூட்டத்தில் வேட்டி, சேலை, தையல் மிஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி, காது கேளாதவர்களுக்கு காது கேட்கும் கருவி ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடை பெறும். விழா ஏற்பாடுகளை சமா ஜத்தின் தலைவர் கே.தங்கராஜ், செயலர் ஏ.செல்வராஜ், பொரு ளாளர் என். உமா சங்கர் பாபு குழுவினர் மேற்கொண்டு வரு கின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x