Last Updated : 03 Oct, 2018 08:14 AM

 

Published : 03 Oct 2018 08:14 AM
Last Updated : 03 Oct 2018 08:14 AM

கும்பகோணம் அருகே செ.புதூரில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை: கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

கும்பகோணம் அருகே செ.புதூர் கிராமத்தில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தி பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே செ.புதூரில் திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலக இளநிலை உதவியாளர் ராகவன் மேற்பார்வையில் நேற்று கிராமசபை கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் வனத்துறை அலுவலர் சுரேஷ்பாபு, கிராம சுகாதார செவிலியர் லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கலா நிதி, கிராம ஊராட்சி செயலா ளர் சாமிநாதன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், செ.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து வணிகர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீன.செல்வம் கூறியதாவது:

தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முதல் செ.புதூரில் பன்னாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை. எங்கள் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் உள்ளூரில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை மட்டுமே விற்பனை செய்கிறோம்.

இதை சட்ட வடிவமாகக் கொண்டு வர வேண்டும் எனக் கருதி, சுதந்திர தினத்தன்று நடை பெற்ற கிராமசபை கூட்டத்தில் அதற்கான தீர்மான மனுவை அளித்தேன். அதை திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, காந்தி பிறந்தநாளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி அதற்கான தீர்மான நகலை எங்களுக்கு வழங்கியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x