Published : 29 Oct 2018 09:52 AM
Last Updated : 29 Oct 2018 09:52 AM
தீபாவளி உட்பட அடுத்தடுத்து பண் டிகைகள் நெருங்கி வருவதால், கைத்தறி பட்டுச்சேலை விற் பனையை ஊக்கப்படுத்துவதற் கான தள்ளுபடி அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த வேண் டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையில் கைத்தறி பட்டுச் சேலைகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியிடப்படும் என 110 விதியின் கீழ் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், அறிவிப்புகளின் மீது தொடர் நடவடிக்கைகள் மேற் கொண்டு செயல்படுத்தப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நெச வாளர்கள் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகள் உறுப் பினர்களாக உள்ள நெசவாளர்கள் உயர்வான கூலியை கருத்தில் கொண்டு முகூர்த்த பட்டுச்சேலை தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடு கின்றனர்.
விலை அதிகமான இச்சேலை களை பொதுமக்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனென்றால், முகூர்த்த பட்டுச்சேலையாக ஒன்று மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. மேலும், உறவினர்களுக்கு வழங்கு வதற்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மதிப்பிலான சேலை களையே அதிகம் விரும்புகின்றனர். இதைத் தனியார் நிறுவனங்கள் சரியாகப் புரிந்துகொண்டு, விலை குறைவான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய் கின்றன.
அதனால், கூட்டுறவு சங்கங் களில் விற்பனையை ஊக்கப் படுத்தி நெசவாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இது வரை அறிவிப்புகள் செயல் பாட்டுக்கு வரவில்லை. தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால், தள்ளுபடி அறிவிப்புகளை செயல்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் தமிழக அரசின் புதிய திட்டங்கள் தொடர் பான அறிவிப்புகளை செயல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அரசாணைகள் வெளி யாகும் என்று நம்புகிறோம் என்றனர்.பட்டுச் சேலைக்கு தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தது செயல்படுத்தப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT