Published : 03 Oct 2018 08:08 AM
Last Updated : 03 Oct 2018 08:08 AM
நிபுணர்கள், தொழில்நுட்ப உதவி யாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கோயில்களில் நகை மதிப்பிடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 36 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், 5 ஆயிரத்து 231 கோயில்கள் பட்டியலிடப்பட்ட கோயில்களாகவும், 30 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கோயில்கள் பட்டியலிடப்படாத கோயில் களாகவும் வகை பிரிக்கப்பட் டுள்ளன. கோயில்களில் பணம், நகைகளை பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தி வருகின்றனர். இவ்வாறு, செலுத்தப்படும் நகை, பணம் அந்தந்த கோயில்களின் சொத்துக்கணக்கில் வரவு வைக் கப்படும்.
நகைகளை சொத்துக் கணக்கில் வரவு வைக்கவும், திருடு போகா மல் பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தவும் பட்டியலிடப் பட்ட கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நகை மதிப்பிடும் பணியை மேற்கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். பட்டியலிடப்படாத கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு பணிகளை யும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் கோயில் களுக்கு சொந்தமான நகைகளை மதிப்பீடும் பணிகளை சரிபார்ப்பு அதிகாரி தலைமையில் தங்கம், வெள்ளி, ரத்னக் கல் நிபுணர்கள், இளநிலை தொழில்நுட்ப உதவி யாளர்களை கொண்ட 11 குழுக் கள் மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகிய 5 இடங்களில் தங்கம், வெள்ளி, ரத்னக் கல் நிபுணர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதேபோல், தலைமையிடம், சென்னை, வேலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய 6 இடங்களில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணி யிடங்கள் காலியாக உள்ளன.
இதுமட்டுமின்றி, வேலூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, மயிலாடுதுறை உள்ளிட்ட 7 இடங்களில் சரிபார்ப்பு அதிகாரியின் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் கோயில்களில் நகை மதிப்பிடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கோயில்களில் 11 குழுக்கள் மட்டுமே நகை மதிப்பீடு செய்வதால் ஏற்கெனவே இப்பணி மந்த கதியில்தான் நடந்து வருகிறது. நகை மதிப்பிடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
காலி பணியிடங்களை சமா ளிக்க தற்போது பணியில் உள்ள வர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, பணிசுமை யின் காரணமாக ஏற்கெனவே முறை யாக செய்த பணிகளை கூட தற்போது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு கோயில்களிலும் நகை கள் எவ்வளவு உள்ளது என்ற விவரம் ஆவணப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.நகை மதிப்பிடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT