Last Updated : 04 Oct, 2018 10:42 AM

 

Published : 04 Oct 2018 10:42 AM
Last Updated : 04 Oct 2018 10:42 AM

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை: வெளியிடப்பட்ட முதல் நாளே ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை; சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆனந்த் தகவல்

காந்தியடிகளின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை, வெளி யிடப்பட்ட முதல் நாளன்றே சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

இந்தியாவில், காந்தியடிகளின் முதல் நினைவு அஞ்சல்தலை 1948 ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அன்றைய தினம்தான், சென்னையில் அஞ்சல்தலை சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டது. தற் போது, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 5 இடங் களில் அஞ்சல்தலை சேகரிப்பு மையம் உள்ளது.

இந்த மையங்களில் அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்படும் நினைவு அஞ்சல்தலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், கண்காட்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சல்தலை சேகரிப்பவர்கள் இந்த மையங்களுக்குச் சென்று அஞ்சல் தலைகளை வாங்கி சேகரித்து வருவர். இவ்வாறு வௌியிடப்படும் சிறப்பு அஞ்சல் தலைகள் வௌியிடப்படும் நாட்களில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகும்.

இந்நிலையில் காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அக்.2-ம் தேதி அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல்தலை வௌியிடப்பட்டது. அன்றைய தினம் அண்ணாசாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் ரூ.2.03 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது. ரூ.5, ரூ.12, ரூ.15, ரூ.20, ரூ.22, ரூ.41 என்ற முகமதிப்புக் கொண்ட 7 அஞ்சல்தலைகள் கொண்ட ஒரு தாள் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதன்முறையாக காந்தி யடிகளின் அஞ்சல்தலை வட்ட வடிவமாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வௌியிடப்படும் சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிடப்படும் நாளி லேயே வாங்கினால் அதற்கு தனி மதிப்பு உண்டு. எனவே, அஞ்சல்தலை சேகரிப்பவர்கள் ஆர்வத்துடன் முதல் நாளே வந்து வாங்கிச் சென்றனர். காந்தியடிகளின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை சர்வதேச அளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் அச்சடித்து வௌியிட்டுள்ளன. இதன்மூலம், காந்தியடிகள் இறந்த பின்பும் சிறந்த தலைவராக அஞ்சல்தலை விற்பனை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x