Published : 31 Oct 2018 08:02 AM
Last Updated : 31 Oct 2018 08:02 AM

ஆஸ்துமா நோயாளி நம் வீட்டிலும் இருக்கலாம்: பட்டாசுகளை குறைத்து புகை மாசுவை தடுப்போம்

மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி பிறக்க இன்னும் 5 நாட்கள்தான் உள்ளன. நாட்கள் நெருங்குவ தால், மக்கள் கூட்டம் கடைத் தெருக்களில் அலை மோதுகிறது. முக்கிய சாலைகளில் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும் பம், குடும்பமாக செல்வதை பார்க்க முடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி.

இத்தனை மகிழ்ச்சி பொங்கும் தீபாவளியில் குழந்தைகள் மத்தி யில் மேலும் மகிழ்ச்சியை கூட்டு வது பட்டாசுகள்தான். ஆனால் மாலை 4 மணிக்கு மேல் இரவு 12 மணியைத் தாண்டியும் இடை விடாது, தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து புகை மாசு ஏற்படும் போதுதான், ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சரிந்துவிடுகிறது.

அவ்வாறு தொடர்ந்து வெடிக் கும்போது கடுமையான புகை வெளியேறுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்துக்கே உரித் தான ஈரப்பதத்துடன் வானம் காணப்படுவதால், அந்த புகை யானது சிதைவடையாமல் காற்றில் மிதக்கிறது. இது பல்வேறு சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் நோய் தீவிரத்துக்கு ஏற்ப கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்தியாவில் 2016-ம் ஆண்டு நிலவரப்படி நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 11 ஆயிரத்து 518 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நுரையீரல் நோயியல் பிரிவு மருத்துவர் ஒரு வர் கூறும்போது, “பட்டாசு புகை யால் காற்று மாசு அதிகரிக்கும் போது, மாசு துகள்கள் நுரை யீரலில் நிறைந்து, ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் குறைகிறது. அதனால் உடலுக்கு ஆக்சிஜன் பரவுவதும் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுறையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படும். ஏற் கெனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும்” என்கிறார்.

பலர் தமக்கு ஆஸ்துமா நோய் இருப்பது தெரியாமல் உள்ளனர். அவர்கள் இதுபோன்ற சூழலை சந்திக்கும்போதுதான் தனக்கு ஆஸ்துமா இருப்ப தையே உணர்கின்றனர். சிலர் உணர்வதற்குள் மிகை காற்று மாசுவால் இறக்கவும் நேரிடுகி றது. சென்னை போன்ற நகர்ப் புறங்களில் ஆஸ்துமா நோயாளி நம் குடும்பத்தில் ஒருவராகவும் இருக்கலாம். எனவே, நாம் வெடிக் கும் பட்டாசுகளின் அளவைக் குறைப்பதன் மூலமும், மிகை ஒலியை ஏற்படுத்தாத பட்டாசு களை வெடிப்பதன் மூலமும், காற்று மாசு ஏற்படுவதை தடுக் கலாம். அப்போதுதான் இந்த தீபாவளி, அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளியாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x