Published : 01 Oct 2018 09:18 AM
Last Updated : 01 Oct 2018 09:18 AM
ஆற்றம்பாக்கம் பகுதியில் கொசஸ் தலை ஆற்றின் குறுக்கே தீவிரமாக நடந்து வரும் தடுப்பணை அமைக் கும் பணி இன்னும் ஒரு மாதத் தில் முடியும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் கொசஸ்தலை ஆறு, ஆந் திர மாநிலம்-கிருஷ்ணாபுரம் பகுதி யில் உற்பத்தியாகி, எண்ணூரில் வங்காள விரிகுடாவில் கலக் கிறது. இந்த ஆற்றின் குறுக்கே 3,231 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்ட பூண்டி நீர்த் தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக் கத்திலிருந்து, மழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
இதனைத் தடுக்கவும், பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்யவும் ஏது வாக பூண்டி ஏரியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில், ஆற்றம்பாக்கம் பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்த தாவது:
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆற்றம்பாக்கம் பகுதியில் தடுப் பணை கட்ட வேண்டும் என, விவ சாயிகள், பொதுமக்கள் தரப் பிலிருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
அதன்படி, ஆற்றம்பாக்கத்தில் ரூ.7 கோடி செலவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
200 மீட்டர் நீளம், ஒன்றரை மீட் டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் இத்தடுப்பணை பணியில், தடுப்பணை மற்றும் அதன் இரு புறமும் தண்ணீர் தேங்குவதற்கான கான்கிரீட் தளம் உள்ளிட்டவை முடிவடையும் தருவாயில் உள்ளன. தடுப்பணை பகுதியில் ஆற்றின் இருபுறமும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 75 சதவீத பணி கள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 25 சதவீத பணிகள் ஒரு மாதத் துக்குள் நிறைவடையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆற்றம்பாக்கத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டு வரும் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பிகள், நீண்டகாலமாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், மின்சார வாரிய அதிகாரிகள் அதை சீரமைக் காததால் பணிகளில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT