Published : 27 Oct 2018 09:49 AM
Last Updated : 27 Oct 2018 09:49 AM
முதல்வர் பழனிசாமியை மாற்றவேண்டும் என ஆளுநரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை, பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் நேற்று முன்தினம், பேரவைத் தலைவர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம்செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதனிடையே தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம் என எதிர்பார்த்திருந்த தினகரன் தரப்பினர், 18 எம்எல்ஏக்களையும் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்தனர். ஆனால், தீர்ப்பு எதிராகஅமைந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து 18 எம்எல்ஏக்களை, நேற்று முன்தினம் இரவு மதுரை ‘ரிங்’ ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து தினகரன் அவர்களைச் சந்தித்தார்.அப்போது தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மக்கள் எங்களை தேர்தலைச் சந்திக்கசொல்கின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் தங்க.தமிழ்செல்வன் மட்டும் தேர்தலை சந்திக்கலாம் என்கிறார். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, மேல்முறையீடுக்கு செல்வதா வேண்டாமா என அறிவிக்கிறேன்’’ என்றார்.இந்நிலையில், நேற்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தினகரன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
இதில்வெற்றிவேல், பார்த்திபன் தவிரமற்ற அனைவரும் பங்கேற்றனர். அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு,ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பிறகு தங்க. தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது: பேரவைத் தலைவர் செய்த தவறை நிரூபிக்க, ஓரிரு நாளில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.தினகரன் பக்கம் இருந்த ஒரே காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் எங்களைதகுதி நீக்கம் செய்தார்.
பேரவைத் தலைவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். சட்டப்பேரவை வாக்கெடுப்பில் ஓட்டை மாற்றிப்போட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் மீது இதுவரை நடவடிக்கைஇல்லை.மேல்முறையீடு செல்வது ஒருபுறம் இருந்தாலும் நாளையே தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயாராகஉள்ளோம்.18 பேரும் நூறு சதவீதம் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறங்குவோம். உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக எங்கள் வழக்கறிஞர் சொல்கிறார்.
அதனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில்எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும்.உண்ணாவிரதம்தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களின் தொகுதிகள், எங்கள் ஆதரவு எம்எல்ஏ.க்களின் 3 தொகுதிகள் மற்றும்ஆர்.கே.நகர் உட்பட மொத்தம் 22 தொகுதிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து தராத தமிழக அரசைக் கண்டித்து வரும் 10-ம்தேதி முதல் உண்ணாவிரதம் நடைபெறும்.
இவ்வாறு தங்க. தமிழ்செல்வன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT