Published : 05 Oct 2018 08:52 AM
Last Updated : 05 Oct 2018 08:52 AM

ரகசியமாக நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளிடம் முதல்வர், துணை முதல்வர் பேசியது என்ன?

ரகசியமாக நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உட்கட்சி விவகாரங்கள் முதல் இடைத்தேர்தல் வெற்றிக்கான அவசியம் குறித்து நிர்வாகிகளிடம் பேசி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர் தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுகவினர் தொகுதி முழுவதும் சின்னங்கள் வரைவது, பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகளுக்கு பண விநியோகம் செய்து தேர்தல் வியூகங்களை வேகமாக அமைத்து வருகின்றனர்.

அமமுகவினர் திருப்பரங்குன் றத்தில் டிடிவி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால், திமுக, பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பெரிய அளவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வேகமும், ஆர்வமும் காட்டவில்லை.

இந்நிலையில் திருப்பரங்குன் றம் இடைத்தேர்தல் செயல் வீரர் கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை யில் நேற்று காலை நடந்தது. அதிமுக புறநகர் மாவட்டச் செய லாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இதில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 15 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒரு கட்சியின் குறிப்பிட்ட தொகுதிக்கான இடைத்தேர்தல் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வரே நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுகவுக்கு மதுரை செல்வாக்கான மாவட்டம் என்பதை நிரூபித்துள்ளோம். கடைசியாக நடந்த திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி உள்ளோம். இந்த வெற் றியைத் தக்க வைக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் அதிக எம்பிக்களைப் பெற முடியும். 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் நாம் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்குக் கட்சியினர் சிறப்பாகப் பணிபுரிய வேண்டும். அதற்கு நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

உங்களுக்கு தொகுதியின் பலம், பலவீனங்கள் நன்றாகத் தெரியும். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எதிர்காலத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். நம்மை வீழ்த்த எதிரிகள் எடுத்த அனைத்து முயற்சிகளும், துரோகங்களும் தோல்வியில் முடிந்துள்ளன என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: 2011-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றோம். ஜெயலலிதா உடல்நலம் குன்றி இறந்தார். அப்போது நான் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தேன். ஒரு தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றப் பார்த்தனர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினேன். அந்தத் தரப்பினர் எம்எல்ஏ-க் களை அழைத்து கூவத்தூரில் வைத்திருந்தனர். அதன் பிறகு முதல்வராக கே.பழனிசாமி பொறுப்பேற்றார். அது பிடிக்காமல் தினகரன், அவருக்கு எதிராக 42 எம்எல்ஏ-க்களை அழைத்துக் கொண்டு என்னிடம் உள்ள 11 எம்எல்ஏ-க்களையும் சேர்த்து ஆட்சியைக் கவிழ்க்க விரும்பினார்.

ஜெயலலிதாவால் உருவாக்கப் பட்ட ஆட்சியைக் கவிழ்க்க எங்க ளுக்குத் துளியும் எண்ணமில்லை. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே நானும், முதல்வர் பழனிசாமியும் இணைந்து செயல் பட ஆரம்பித்தோம். அதனாலே, அவரிடம் இருந்த 42 எம்எல்ஏ-க் கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினகரனை ஏன் எதிர்க்கிறேன்?

ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: “அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்ததாலே சசிகலா, அவரது குடும்பத்தினர் உட்பட 14 பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு வெளியேற்றினார். அதில் சசிகலாவின் மன்னிப்புக் கடிதத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு சேர்த்துக் கொண்டார். அப்போது எங்களை அழைத்து, சசிகலா கட்சி நடவடிக்கைளில் தலையிட மாட்டார் என்ற நிபந்தனையிலே சேர்க்கப்பட்டதாகச் சொன்னார்.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன், அதன் பிறகு சேர்க்கப்படவே இல்லை. அவர் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம். அதற்காகவே தினகரனை எதிர்க்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x