Published : 13 Oct 2018 08:34 AM
Last Updated : 13 Oct 2018 08:34 AM
தமிழகம் முழுவதும் மக்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2 மாதங்களில் புதிதாக 600-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்று கடந்த 2016-ல் அப்போதைய முதல் வர் ஜெயலலிதா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழு வதும் முதல்கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வரான கே.பழனிசாமி உத்தரவின்பேரில் மேலும் 500 கடைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ் மாக் கடைகளை மூட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழகம் முழு வதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள் ளாட்சி சாலைகளாக வகை மாற் றம் செய்யப்பட்டு, தமிழகம் முழு வதும் சுமார் 1,300 கடைகள் திறக்கப் பட்டன. இதில் முறையாக விதிகள் பின்பற்றப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் 1,300 கடைகளும் மூடப்பட்டன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ் மாக் தொடர்பான வழக்குகளை கடந்த ஜூலை மாதம் முடித்து வைத்து உத்தரவிட்டது. இதை யடுத்து, தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை திறக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட மேலா ளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு திறக்கப்படும் டாஸ் மாக் கடைகளுக்கு எதிராக ஆங் காங்கே பெண்கள் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப் பினும், எதிர்ப்புகளை பொருட்படுத் தாமல், ஏற்கெனவே செயல்பட்டு வந்த பழைய எண்ணைப் பயன் படுத்தி கடைகள் திறக்கும் பணி யில் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, சென்னையில் சுமார் 50 கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட புதிய டாஸ்மாக் கடைகள் கடந்த 2 மாதத்தில் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4,300-ஐ தாண்டியுள் ளது.இதுதொடர்பாக கேட்டபோது பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில் மதுக்கடை களை திறப்பதற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பை தமிழக அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கும்போதுகூட தீர்ப்பை சரியாக தமிழக அரசு படிக்க வேண்டும் என்றுதான் கூறியதே தவிர, கடைகளை திறக்கலாம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால், தமிழக அரசு தொடர்ந்து கடைகளை திறந்து வருகிறது.
மதுக்கடைகளுக்கு எதிராக 4 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு, தசரா விடு முறைக்குப் பிறகு மனு தாக்கல் செய்ய உள்ளோம். தமிழக அரசு கூடுதலாக டாஸ்மாக் கடைகளை திறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT