Published : 02 Oct 2018 09:56 AM
Last Updated : 02 Oct 2018 09:56 AM

இன்று மகாத்மாவின் 150-வது பிறந்த நாள் ‘காந்தி-கஸ்தூரிபா’ படத்துடன் 1969-ல் வெளியான அஞ்சல்தலை: முதல்முறையாக இந்திய அஞ்சல்தலையில் இடம்பெற்ற தம்பதி

மகாத்மா காந்தியின் 100-வது பிறந்த நாளையொட்டி 1969-ல் காந்தி - கஸ்தூரிபா படத்துடன் வெளியான அஞ்சல்தலையே, இந்தியாவில் முதல்முறையாக தம்பதியரின் படத்துடன் வெளி யான அஞ்சல்தலை என்ற பெரு மைக்குரியதாக விளங்குகிறது.

அகிம்சை என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டு, 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையரை வெளியேற்றினார் மகாத்மா காந்தி. 1869 அக்டோ பர் 2-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, தென் னாப்பிரிக்காவில் கருப்பின மக்க ளுக்காக குரல் கொடுத்தார். பின் னர் நாடு திரும்பிய அவர், பார தத்தை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையரை வெளியேற்றப் போராடினார்.

உலகில் ஆயுதமேந்தியப் போராட்டங்களே வெற்றிபெற்ற சூழ்நிலையில், `அகிம்சை’ என்ற புதுமையான போராட்ட வழியைப் பின்பற்றி, வெள்ளையர்கள் வெளி யேற முக்கியக் காரணமானார். நாட்டின் தேசப்பிதாவான அவர், சுதந்திரத்துக்குப் பிறகு 1948 ஜன வரி 30-ல் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். இந்திய அரசு அவ ரைப் பல்வேறு காலகட்டங்களில் கவுரவித்துள்ளது.

1969 அக்.2-ம் தேதி மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளின்போது, அவரது மனைவி கஸ்தூரிபாவுடன் இணைந்த புகைப்படத்தை அஞ்சல்தலையில் வெளியிட்டது மத்திய அரசு. சுதந்திர இந்தியாவில் தம்பதியின ரின் புகைப்படம் அஞ்சல்தலையில் வெளியானது இதுவே முதல்முறை என்று பெருமிதத்துடன் கூறுகிறார், தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் அதிகாரி நா.ஹரிஹரன்.

‘‘சத்தியம், அகிம்சைக்கு உதார ணமாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. நாட்டின் விடுதலைக்குப் போராடியது மட்டுமின்றி, ஜாதி, மத வேறுபாடுகளைக் களையவும், பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தவர் அவர். உலகிலேயே மிக அதிகமான நாடுகளில் (86 நாடுகள்) காந்திக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1948-ல் சுதந்திர தினத்தன்று காந்தியின் நினைவாக ஒன்றரை அணா, மூன்றரை அணா, பன்னிரெண்டு அணா மற்றும் ரூ.10 மதிப்பில் 4 அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. இந்த அஞ்சல் தலைகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளைத் தவிர, உருது மொழியும் இடம்பெற்றிருந்தது. மகாத்மாவை `பாபு` என்று அழைக் கும் பெயரையும் இந்த அஞ்சல் தலைகளில் இடம்பெறச் செய்த பெருமை ஜவஹர்லால் நேரு வையே சேரும். இது மக்களிட மும், அஞ்சல்தலை சேகரிப்பாளர் களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நாட்டின் அஞ்சல்தலையில் வெளி நாட்டவரை முதல்முறையாக இடம்பெறச் செய்த பெருமையும் காந்திக்குதான் உரியது.

இதுவரை வெளியான இந்திய அஞ்சல்தலைகளில் 35-க்கும் மேற்பட்ட முறை மகாத்மா காந்தி யின் புகைப்படம் இடம்பெற்றுள் ளது. 1951 அக்டோபர் 2-ம் தேதி, அவரது 82-வது பிறந்த நாளின்போது முதல்முறையாக அஞ்சல் அட்டையிலும் காந்தியின் படம் இடம்பெற்றது.

காந்தியின் போராட்டங்களுக் கும், செயல்பாடுகளுக்கும் தோளோடுதோள் நின்று உதவிய வர், அவரது மனைவி கஸ் தூரிபா. அவரும் சுதந்திரப் போராட்டத்தின்போது சிறைக்குச் சென்றுள்ளார். 1944 பிப்ரவரி 22-ம் தேதி புனாவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த கஸ்தூரிபா காந்தி, உடல்நலக் குறைவால் அங்கு உயிரிழந்தார். 75 வயதான அவர், இந்திய சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இன்னுயிரை ஈந்தார்.

`நான் அகிம்சையை எனது மனைவியிடம் இருந்துதான் கற் றுக்கொண்டேன்` என்று மகாத் மாவே குறிப்பிட்டுள்ளார். காந்தி, கஸ்தூரிபா இருவருமே 1869-ல் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கஸ்தூரிபா இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1964 பிப். 22-ம் தேதி 15 பைசா மதிப்பில் கஸ்தூரிபா படத்துடன் கூடிய அஞ்சல்தலையை வெளியிட்டு, அவரைக் கவுரவப்படுத்தியது இந்திய அரசு.

1969-ல் மகாத்மாவின் நூற் றாண்டு விழாவின்போது, காந்தி-கஸ்தூரிபா படங்களுடன்கூடிய அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு தம்பதியின் புகைப்படத்தை அஞ்சல்தலையில் வெளியிட்டது இதுவே முதல்முறையாகும். 20 பைசா மதிப்புகொண்ட இந்த அஞ்சல்தலையில் 1869-1969 என்ற ஆண்டும், கஸ்தூரிபா - காந்தி ஆகி யோரைக் குறிப்பிடும் வகையில் `பா-பாபு` மற்றும் `காந்தியின் நூற்றாண்டு` என்ற வார்த்தைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசப்பிதாவின் 150-வது ஆண்டில் இதை நினைவு கூர்வது மிகுந்த பெருமையளிக் கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x