Published : 02 Oct 2018 10:14 AM
Last Updated : 02 Oct 2018 10:14 AM
பல்லவ மன்னர்களின் வரலாறு மற்றும் குடவரை சிற்பங்களின் பாரம்பரியத் தகவல்களுடன் கூடிய அருங்காட்சியகம் மாமல்லபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக மத் திய நீர்வள அமைச்சகம் மூலம் திட்ட மதிப்பீடு மற்றும் வரை படம் தயாரிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளதாக தொல்லி யல் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்கள் மிகுந்த நுட்பமான வேலைபாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள் ளன. மேலும், பல்லவ மன்னர்களின் வரலாற்றை விளக்கும் அடையாளச் சின்னங்கள் மற்றும் சிற்பங்களை தொல்லியல் துறை பாதுகாத்து, பராமரித்து வருகிறது.
சிற்பங்களைக் கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், குடவரை சிற்பங்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் வரலாற்றை முழுமையாக அறிய முடியாத நிலை உள்ளது. வழிகாட்டிகள் என்று கூறிக் கொள்ளும் சிலர் சரியான தகவல்களைக் கூறுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, பல்லவ மன்னர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் குடவரை சிற்பங்களின் வரலாற்றுத் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், குடவரை சிற்பங் கள் மற்றும் பல்லவர்களின் வர லாற்றுத் தகவல்களுடன், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அருங் காட்சியகம் அமைக்க மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்பேரில், கடற்கரை கோயில் அருகே அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிகளை, மத்திய நீர்வள அமைச் சகத்தின் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன தொழில்நுட்ப முறையில் அருங்காட்சியகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்தி, வரலாற்றுத் தகவல்களை ஒலி, ஒளியாகக் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப் பணிகளுக்கான திட்டமதிப்பீடு, வரைபடம் தயாரிக்கும் பணிகளை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீர் மற்றும் மின்சார சேவை ஆலோசனை பிரிவின் மூலம் மேற்கொள்ள கலாச்சாரத் துறை திட்டமிட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT