Last Updated : 29 Oct, 2018 04:42 PM

 

Published : 29 Oct 2018 04:42 PM
Last Updated : 29 Oct 2018 04:42 PM

நான் எப்போதும் விவசாயிதான்; வயல் பணிகளில் கலக்கும் புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தான் எப்போதும் விவசாயிதான் எனவும், அதன்பிறகு தான் எம்எல்ஏ, அமைச்சர் எனவும் கூறுகிறார். விவசாயப் பணிகளில் தானே ஈடுபடுகிறார்.

புதுச்சேரியில் காரைக்கால் பிராந்தியத்திலுள்ள திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கமலக்கண்ணன். தற்போது வேளாண், கல்வி மற்றும் மின்துறை அமைச்சராக உள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தூய்மை சேவையின்போது கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூய்மைப் பணியை முதலில் தொடங்கியவர். அமைச்சர் கமலக்கண்ணனை ஆளுநர் கிரண்பேடி பலமுறை பாராட்டியுள்ளார்.

தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அமைச்சர் கமலக்கண்ணன், ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாளில் தனது நிலத்தில் சம்பா நடவில் இறங்கியுள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

காரைக்கால் அம்பகரத்தூர் கிராமத்திலுள்ள தனது நிலத்தில் அடிப்படைப் பணிகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில்மாநில அறிவியல் கண்காட்சி தொடக்க நிகழ்வில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் தனது விவசாய அனுபவங்களை 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டதாவது:

“நான் அடிப்படையில் மட்டுமில்ல எப்போதும் விவசாயிதான். அதன்பிறகுதான் எம்எல்ஏ, அமைச்சர் என்ற பொறுப்புகள். எனக்கு விவசாயத்தில் அனைத்து பணிகளும் தெரியும். எல்லா வேலையையும் செய்து விடுவேன். பொதுப்பணிக்கு வரும் முன்பு எனக்கு விவசாயம்தான் முழு நேரப்பணி. கடந்த முறை பயிர் நடும்போது நான் இல்லை அதனால் சில தவறுகள் தெரிந்தது. எனக்குத் தெரிந்த வழிமுறைகளைத் தெரியப்படுத்த இரண்டு மணி நேரம் வயலில் இருந்தேன். நான் கற்றதை அங்கிருந்தோருக்கு தெரியப்படுத்தினேன். அவ்வளவுதான்" என்கிறார் சிரித்தபடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x