Published : 09 Oct 2018 08:57 AM
Last Updated : 09 Oct 2018 08:57 AM
கணினி அறிவியல் வளர்ச்சியால் நாள் தோறும் தகவல் பரிமாற்றத்தில் எண்ணற்ற மாற்றங்கள். பேக்ஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று ஆரம்பித்து இன்று நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. ஆனால், இத்தகைய தகவல் தொடர்புகள் வராத காலத்தில் தபால்காரர்களே மக்களிடையே, மிகப் பெரிய ஊடக தொடர்பு சாதனமாக செயல்பட்டனர்.
நவீன போஸ்ட்மேனுக்கு முன்னர் ‘ரன்னர்கள்’ எனப்படும் தபால்காரர்கள், ஊருக்கு ஊர் தபால்களை, ஓட்ட நடையி லேயே பயணித்து விநியோகித்தனர். காடு, மேடு, கரடு, முரடு பாதையானாலும் தவறாது கடிதங்கள் சென்றடையும் என்ற உத்தரவாதம் இருந்தது. மிதிவண்டியை தவிர வேறு வாகனங்களில் தபால்காரர்கள் சென்றதை நம் தலைமுறையினர் கண்ட தில்லை. தற்போது கம்பியில்லா தகவல் தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் தபால்காரர் கள் சேவைகளை இன்றளவும் மறக்கவும், மறுக்கவும் முடியாது.
கேரளாவில் அப்படி தபால்துறையில் தன்னுடைய பணிக்காலத்தில் மிகப்பெரிய சேவை செய்த ஒரு தபால்காரரின் பணியை கவுரவப்படுத்தும் வகையில் இந்தியாவி லேயே முதல்முறையாக ஒரு சாலைக்கு அவரது பெயரை அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் சூட்டியுள்ளது. கேரளாவில் மேற்கு கொச்சியில் தோப்பம் பாடியில்தான், ‘சாக்கோ’ என்ற தபால்காரரின் பெயரில் அந்த சாலை அமைந்துள்ளது.
கொச்சியில் முக்கியத் துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது ஒட்டுமொத்த தபால்காரர்களுடைய சேவையை கவுரவப்படுத்தும் வகையில் உள்ளதாக அம்மாநில தபால்காரர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும், நடை யாக நடந்தும், இந்த கணினி காலத்திலும் சைக் கிளில் சென்று தபால்களைப் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களுக்கு, எந்த கவுர வமும், பிரதிநிதித்துவமும் இதுவரை அமைய வில்லை என்று தபால் துறையில் பணிபுரிந்த வர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற தபால் அலுவலர் நா.ஹரிஹரன் நம்மிடம் பேசினார். ‘‘தபால்காரர் சாக்கோ ஆரம்பத்தில் முண்டம் வேலி என்னும் இடத்தில் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு தோப்பம் பாடிக்கு மாறுதலானார். சுதந்திரத்துக்கு முன்பு தன்னுடைய 13 வயதில் தபால்துறையில் ரன்னராக பணியில் சேர்ந்துள்ளார். தோப்பம்பாடியில் 40 கி.மீ., தினமும் சென்று கடிதங் களைப் பட்டுவாடா செய்துள்ளார்.
கடிதங்களைப் பட்டுவாடா செய்வதற்கு ஆரம்பத்தில் நடந்தும், அதன்பிறகு சைக்கி ளிலும் சென்றுள்ளார். ஒரு கடிதமாக இருந்தாலும் அதை பட்டுவாடா செய்யாமல் திரும்ப மாட்டார். அவர் படிப்பறிவில்லாத மக்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காட்டிவிட்டுத்தான் செல்வாராம். இவரின் அணுகுமுறையால் அப்பகுதியில் ஒவ் வொரு குடும்பத்திலும் ஒருவராக இவர் இருந்துள்ளார். அவரது குடும்ப விசேஷங் களில் முதல் ஆளாக வந்து நிற்பாராம். சாக்கோ இல்லாத குடும்ப நிகழ்ச்சியே கிடையாது என்று கூட சொல்லலாம்.
இவரது சகோதரர் ஜோசப்தான் இவரை வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். தொழிற்சங்கத்திலும் சேர்த்து தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுடைய உரிமை களுக்காக குரல் கொடுத்துள்ளார். போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இவர் தன்னுடைய 71 வயதில் 1987-ம் ஆண்டு இறந்துள்ளார். அவரது பெயரில் ஒட்டுமொத்த தபால்காரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே கேரளாவில் ஒரு சாலைக்கு ‘சாக்கோ’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
தற்போதைய எஸ்எம்எஸ் குறுஞ் செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள், இ-மெயில் தகவல்கள் காலப்போக்கில் பாதுகாக்க முடியாமல் அழிந்துவிடும். ஆனால், தபால்களைத் தலைமுறை கடந்தும் பாதுகாத்து வைக்கலாம். அந்த பழைய கடிதங்களை எடுத்து பார்க்கும்போதும், படிக்கும்போதும், நம்முடைய பசுமையான நினைவுகள் வந்துபோகும்.
லண்டனில் லிட்டில் பிரிட்டன் பகுதியில் உள்ள பூங்காவுக்கு தபால்காரர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘போஸ்ட்மேன் பார்க்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அதுபோல், தர்மஸ்தலாவில் தபால்காரர் போன்ற மாதிரி சிலையை நிறுவியுள்ளனர். இதேபோல், தமிழகத்திலும் தபால்காரர்களைக் கவுரவப் படுத்த வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT