Published : 13 Jan 2014 07:49 PM
Last Updated : 13 Jan 2014 07:49 PM
சென்னை தண்டையார்பேட்டை ஹவுஸிங் காலனியில் பாபு ஜெகஜீவன் ராமின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை நடந்த விழாவில் இந்த சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் பாபு ஜெகஜீவன்ராம் சிலையை திறந்து வைத்ததற்காக பெருமைப்படுகிறேன். தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்காக மத் திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2012-13ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக 66,159 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 31 சதவீதம் அதிகமாகும் என்றார்.பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் தன்னிச்சையான கருத்துக்களை வெளியிடக் கூடாது. இரு நாட்டு மீனவர்களின் பாதுகாப்புமே முக்கியமானது. .
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது தவறான கருத்து. 2009-ம் ஆண்டைப்போலவே வரும் நாடாளுமன்றத் தேர்த லிலும் தேசிய அளவில் மதச்சார் பற்ற கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி., சென்னை துறை முக பொறுப்புக்கழக தலைவர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT