Published : 31 Aug 2018 09:44 AM
Last Updated : 31 Aug 2018 09:44 AM

தமிழகத்தில் சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை: புதிய ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளை தொடங்குவதில் சிக்கல்

தமிழகத்தில் சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையால் புதிய ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகள் திறப்பு விழா தள்ளிப் போவதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ‘எய்ம்ஸ்’ மருத் துவமனைகள் தொடங்குவது போல, தமிழகத்தில் அரசு மருத் துவக்கல்லூரி உள்ள அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகள் தொடங்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தொடர்ச்சி யாக மதுரை, கோவை, திருநெல் வேலி மற்றும் தஞ்சாவூரில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனைகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில், மதுரை, திருநெல்வேலி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு வார்டுகள், ஆய்வ கங்கள், அதிநவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.

கோவை, தஞ்சாவூரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளைப் பொறுத்தவரை பேராசிரியர், இணைப் பேராசிரி யர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு டிஎம், எம்சிஎச் முடித்த சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். ஜூனியர், சீனியர், அசிஸ்டென்ட் மருத்துவப் பணியிடங்களை மட்டும் எம்எஸ், எம்டி படித்தவர்களைக் கொண்டு நிரப்பலாம்.

ஏற்கெனவே தொடங்கிய சேலம், திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலேயே சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்து வர்கள் பற்றாக்குறையால் முழுமை யான அதிநவீன சிகிச்சை, நோயா ளிகளுக்கு கிடைப்பதில் தற்போது வரை சிக்கல் உள்ளது.

அதுபோல், சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளுக்கு செவிலியர்கள், மருத்துவ பணியா ளர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது நோயாளிகள் வருகைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்கள் இல்லை. ஆனாலும், ஏற்கெனவே உள்ள பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், செவிலியர்களை கொண்டு மதுரை, திருநெல்வேலி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளைத் தொடங்க, அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை நிர்வாகங்கள் தயாராக இருந் தும், அதற்கு தமிழக அரசு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஜூலை 30-ம் தேதிக்குள் தொடங்குவதாகவும், ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையைத் தொடங்குவதாகவும் மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்து இருந்தார். ஆனால், தற்போது வரை தொடங்காமல் இருப்பதற்கு சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலை வர் டாக்டர் செந்தில் கூறியதாவது:

தமிழகத்தில் 2,000 சிறப்பு பட்ட மேற்படிப்பு (டிஎம், எம்சிஎச்) மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் 500 பேர் அரசு மருத்துவமனைகளில் பணி புரிகின்றனர். ஆண்டுதோறும் 230 சிறப்பு பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் படித்து முடித்து வெளி யேறுகிறார்கள். ஆனால், வெறும் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அத னால், புதிதாக தொடங்கப்படும் மதுரை, கோவை, திருநெல் வேலி மற்றும் தஞ்சாவூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை களுக்கு சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

இதில் மதுரை, கோவை முக் கிய நகரங்கள் என்பதால் இங்கு ஓரளவு சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. தஞ்சாவூர், திருநெல்வேலி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளுக்கு சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கிடைப் பதில் பெரும் சிரமம் ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடுதல் சிறப்பு பட்ட மேற்படிப்பு

இதுகுறித்து, மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘புதிதாக தொடங்கப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைக்கு சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருப் பது உண்மைதான். அதற்காக மட்டுமே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகவில்லை.

உதாரணமாக மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யில் 6 துறைகளுடன் தொடங் கப்படுகிறது. இந்த துறைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், 2 உதவிப்பேராசிரி யர்கள் வீதம் 4 பேர் தேவைப் படுகிறார்கள். ஒவ்வொரு துறைக் கும் 2 யூனிட்டுக்கு மருத்துவர்கள் தேவைப்படும். அந்த அடிப்படை யில் மதுரைக்கு மட்டும் தற் போது 20 சிறப்பு பட்ட மேற் படிப்பு மருத்துவர்கள் தேவைப்படு கின்றனர்.

இந்த பற்றாக்குறையை போக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் செயல்படும் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதல் சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவ படிப்புகள் உருவாக்கப்படும். அதில் படித்து முடிக்கும் சிறப்பு பட்ட மேற்படிப்பு மருத்துவர்களைக் கொண்டு இந்த பற்றாக்குறை நாளடைவில் சரி செய்யப்படும்’’ என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x