Published : 20 Aug 2018 09:23 AM
Last Updated : 20 Aug 2018 09:23 AM
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் 8 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சிறுதானியங் கள், பருப்பு வகைகள், எண் ணெய் வித்துகளின் மகசூல் இரட் டிப்பாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங் களிலும் பெய்து வருவதால், காவிரி, பவானிசாகர், அமராவதி, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. அதேநேரத்தில், மீதமுள்ள 20 மாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமியாக (மானாவாரி) இருக்கின்ற போதிலும், கோடை மழை நன்றாகப் பெய்ததால் மானாவாரி சாகுபடியும் சூடுபிடித் துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு பரவலாக மழை பெய் திருப்பதுடன், நவீன தொழில்நுட் பம் மற்றும் சீரிய சாகுபடி வழி முறைகளைக் கடைப்பிடித்ததால் இதுவரை 8 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் மழைப் பொழிவு நன்றாக உள்ளது. மத்திய மாவட்டங்களில் மழை குறைவா கப் பெய்துள்ளது. வடக்கு மாவட் டங்களில் அவ்வளவாக மழை இல்லை. இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதுவரை 8 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
88 ஆயிரத்து 675 ஏக்கரில் சிறுதானியங்களும், 57 ஆயிரத்து 65 ஏக்கரில் பருப்பு வகைகளும், 40 ஆயிரத்து 760 ஏக்கரில் எண் ணெய் வித்துகளும், ஆயிரத்து 545 ஏக்கரில் பருத்தியும் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயி ரத்து 45 ஏக்கரில் விதைப்பு முடிந்துள்ளது.
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 850 ஏக்கரில் (இலக்கு 25 ஆயிரம் ஏக்கர்) மானாவாரி சாகுபடி செய் யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 124 ஏக் கரில் (இலக்கு 12 ஆயிரம் ஏக்கர்) மானாவாரி சாகுபடி நடை பெற்றுள்ளது. மழைப்பொழிவு குறைவே இதற்கு காரணம். மானா வாரி சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் ஏக்கருக்கு ரூ.500 உழவு மானியம், 50 சதவீத மானியத்தில் விதை, 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள் வழங்குதல் உள்ளிட்ட செலவினங்களுக்காக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மானவாரி சாகுபடி இரட் டிப்பாகியுள்ளதால் மக்காச் சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், ஆமணக்கு, பருத்தி ஆகியவற்றின் மகசூல் பன்மடங்கு அதிகரிக்கும். அதனால் மக்களுக்கு சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் தாராளமாகக் கிடைக் கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT