Published : 27 Aug 2018 06:00 PM
Last Updated : 27 Aug 2018 06:00 PM
கோத்தகிரியில் மது போதையில் தந்தையைக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிஷன் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ஆண்டனி பேட்ரிக் (75). இவரது மகன் நெல்சன் ரிச்சர்டு தச்சு வேலை செய்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும் வாக்குவாதம் முற்றி நெல்சன் தந்தை ஆண்டனியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ஆண்டனி பேட்ரிக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீஸார், மகன் நெல்சன் ரிச்சர்டை கைது செய்தனர். ஆண்டனி பேட்ரிக்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் மகனே தந்தையைக் கொன்ற சம்பவம் கோத்தகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT