Published : 27 Aug 2018 08:56 AM
Last Updated : 27 Aug 2018 08:56 AM
சென்னையில் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அறிந்தி ராத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள தகவல்களை அறிய ஆய்வாளர்கள் மூலமாக முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர் நூலகர்கள்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளது தமிழக அரசின் கீழ்த்திசை சுவடிகள் நூலகம். கடந்த 1869-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூலகம் 70,000-க்கும் மேற்பட்ட சுவடிகளைப் பாதுகாத்து வருகிறது. நூலகம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை யாரும் அறிந்திராத மொழியில் எழுதப்பட்ட இரு ஓலைச் சுவடிகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இடம்பெற்றுள்ள செய்தி, எந்த மொழியில், என்ன எழுதப் பட்டுள்ளது என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடித்துக் கூற முடியவில்லை.
இந்நிலையில் அதற்கான முயற்சிகளை ஆய்வாளர்கள் மூலமாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறுகிறார் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தின் நூலகர் ஆர்.சந்திரமோகன்.
தொடர் முயற்சி
இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
இந்த நூலகம் தொடங்கப்பட்ட திலிருந்து அந்த ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருக்கும் சுவடிகளில் அவற்றில் உள்ள தகவல்களை மட்டும் இதுவரைப் படிக்க முடியவில்லை. இதற்காக கடந்த 1962-ல் பத்திரி கைகளில் படத்துடன் விளம்பரம் அளித்தும் பார்த்தோம். வந்தவர்கள் யாராலும் படித்துச் சொல்ல முடியவில்லை.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் இருந்து வந்த ஆய் வாளர் ஒருவர் இது கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த தாக இருக்கலாம் என்று தெரிவித் தார். இரு மாதங்களுக்கு முன் திருச்சியைச் சேர்ந்த ஓர் ஆய்வா ளர் இந்த ஓலைச் சுவடி குறித்து தகவலறிந்து தேடி வந்தார். வேறு யாரும் படித்துச் சொல்ல முன்வரவில்லை.
தமிழ் மற்றும் பிற மொழிகளில் உள்ள ஓலைச் சுவடிகளைக் காட்டி லும் இவை முற்றிலும் வித்தியாச மான முறையிலான எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. அதிக வெளி நாட்டினர் வருகின்றனர். அவர் களும் இந்த ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டு செல்கின்றனர். கீழ்த்திசை சுவடிகளை நூலகத்தில் தமிழ், செலுங்கு, அரபு, உருது, பெர்சியா, சமஸ்கிருதம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஓலைச் சுவடிகள் இருப்பதால் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மொழி கள் குறித்து ஆய்வு செய்யும் பல மொழி அறிந்தவர்கள் வருகின் றனர். ஆனால் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நமக்கு முன்னால் இந்த ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்தவர்களுக் கும் விவரங்கள் எதுவும் தெரிய வில்லை. எந்தக் குறிப்புகளும் இதைப் பற்றி சேகரித்து வைக்கப் படவில்லை. நம்மிடம் இருக்கும் ஓலைச் சுவடிகளிலேயே மொழி, எழுத்தும் வடிவம் தெரியாமல் உள்ள ஓலைச் சுவடிகள் இவை மட்டுமே. அதில் உள்ள விஷயங் களைத் தெரிந்து கொள்ளவே முற்பட்டு வருகிறோம். ஆய்வாளர் கள் உதவி இருந்தால் கண்டுபிடித்து விட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுருக்கெழுத்தாக இருக்க வாய்ப்பு
இந்நிலையில் அவற்றைப் பற்றி ஆய்வு செய்துவரும் திருச்சியைச் சேர்ந்த தொன்மை குறியீட்டு ஆய்வாளர் தி.லே.சுபாஷ்சந்திரபோஷ் கூறும்போது, “சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச் சுவடிகளாகவே இவை இருக்க வேண்டும். ஓலைச் சுவடிகளில் உள்ள எழுத்துகள் தமிழில் சுருக்கெழுத்து முறையில் எழுதப்பட்டவையாகவே இருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் உறுதியாக கூறி விட முடியாது. எழுதப் பட்டுள்ள விஷயங்கள் பற்றிய ஆய்வு தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT