Last Updated : 20 Aug, 2018 09:43 AM

 

Published : 20 Aug 2018 09:43 AM
Last Updated : 20 Aug 2018 09:43 AM

காஞ்சியில் குப்பை தொட்டியாக மாறிய குளங்கள்: பராமரித்து நிலத்தடி நீரை காக்க மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் நகராட்சியில் நீர் நிலைகளில் குப்பை கொட்டப் படுவதால், நிலத்தடி தண்ணீர் மாசமடைந்து வருகிறது. எனவே குளங்களை பராமரிக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இவர்களுக்கு வேகவதி, பாலாறு மற்றும் திருபாற்கடல் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. எனினும், நகரத்தின் குடிநீர் தேவையை கருத் தில் கொண்டு அருகில் உள்ள செவிலிமேடு, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம் ஊராட்சி பகுதிகள் கடந்த 2011-ம் ஆண்டு நகராட்சி யுடன் இணைக்கப்பட்டன. பின்னர், வார்டுகளை மாற்றியமைத்து பெருநகராட்சியாக அறிவிக்கப் பட்டது.

இதன்மூலம் திருக்காலிமேடு, தேனம்பாக்கம் கிராமப் பகுதி களின் நீர் நிலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி, நகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேற்கண்ட பகுதி களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்தி அந்த குளங்களை, நகராட்சி நிர்வாகம் பராமரிக்கா ததால் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, திருக்காலிமேடு மக்கள் கூறும்போது, “8 ஏக்கர் பரப்பளவு கொண்ட சின்ன வேப் பங்குளத்தின் பராமரிப்பு பணிகள் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்த போது, கால்வாய்கள் பராமரிக்கப் பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டது. நகராட்சியுடன் இணைந்த பின், நகர மேம்பாடு எனக்கூறி சாலைகள் அமைத்து கால்வாய்களை மூடினர். மேலும், மழைநீர் கால்வாய் அமைத்து குடியிருப்புகளின் கழிவு நீரை குளத்தில்விட்டதால் இதில் இருந்த மீன்கள், செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது மீன்கள் மட்டும் அகற்றப்பட்டதே தவிர, மழைநீர் வரத்திற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

மேலும், இயற்கைக்கு புறம்பாக கால்வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீரை கழிவுநீர் கால்வாயில் வெளியேற்றுகின்ற னர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக சரிந்து, புதிதாக இணைந்த பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகரப் பகுதியில் உள்ள 53 குளங்களை சீரமைத்து மழை நீரை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நக ராட்சி ஆணையர் சர்தார் கூறும் போது, “நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதை ஏற்க முடியாது. திருக்காலிமேடு சின்ன வேப்பங் குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதியில் உள்ள நீர் நிலைகளின் பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x