Published : 03 Aug 2018 08:43 AM
Last Updated : 03 Aug 2018 08:43 AM
மரக்கன்றுகள் மற்றும் செடிகளை உருவாக்கும் ஒரு பசுமைக் குடிலை ஐசிஎப் கிழக்கு காலனி குடியிருப்புப் பகுதியில் நிர் வாகம் உருவாக்கியுள்ளது. இதில் பல்வேறு செடிகள், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஐசிஎப் குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் அவற்றை நடும் பணி மேற் கொள்ளப்படுகிறது. இங்கு 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இங்கிருந்து மரக்கன்றுகள் எடுத்து ஐசிஎப் வளாகத்தில் அதிகளவில் மரங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளவுள்ளது.
வில்லிவாக்கம், பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஐசிஎப் வளாகத்தில் உள்ள ஏரி நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.1 கோடி செலவில் இந்த ஏரி தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதால் தற்போது அதிகஅளவில் நீர் தேங்கியுள்ளது. கரையோரமாக அழகிய பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பசுமையை போற் றும் வளாகமாக ஐசிஎப் மாறி வருகிறது. வார்தா புயலுக்கு பிறகு இந்த வளாகத்தில் புதியதாக 6,500 மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது அவை சிறிய மரங்களாக மாறியுள்ளன.
சென்னை பெரம்பூரில் கடந்த 1952-ம் ஆண்டு ஐசிஎப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) தொடங்கப் பட்டது. 207 ஹெக்டேர்கள் கொண்ட இந்த வளாகத்தில் ஐசிஎப் தொழிற்சாலை, பள்ளிகள், ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த தொழிற்சாலையில் காலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுக்காக மரக்கன்றுகளை நடுதல், மரபு சாரா மின்சக்தி தயாரிப்புக்காக காற்றாலைகள் மற்றும் சூரியமின் சக்தி அமைப்புகளை நிறுவுதல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் போன்ற பல் வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐசிஎப்பின் இந்த சிறப்பான பணிகளை பாராட்டி, கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் தொடர்ந்து இருமுறை ரயில்வே அமைச்சரிடம் இருந்து சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதுகளை பெற்றுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வார்தா புயலால் ஐசிஎப் வளாகத்தில் மட்டும் 808 மரங்கள் விழுந்தன. இதைத்தொடர்ந்து மரங்கள் விழுந்த இடங்களை தேர்வு செய்தும், காலியாகவுள்ள இடங்களை தேர்வு செய்தும் மரங்கன்றுகள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, புதியதாக 6,517 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் தற்போது சிறிய மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.
இதுபற்றி ஐசிஎப் செயலாளர் கே.என்.பாபு கூறும்போது, “ஐசிஎப் வளாகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நிலவரப்படி, வார்தா புயலுக்கு முன்பு மொத்தம் 11,600 மரங்கள் இருந்தன. 2016 டிசம்பரில் ஏற்பட்ட வார்தா புயலால் 809 மரங்கள் விழுந்தன.
இதனால் ஐசிஎப் வளாகம் பசுமையை இழந்தது. இதைத்தொடர்ந்து இப்பகுதியில் பசுமையை மீண்டெடுக்க 6,517 புதிய மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகள் தற்போது சிறிய மரங்களாக உருவெடுத்துள்ளன. ஐசிஎப் வளாகத்தில் தற்போது 17,368 மரங்கள் உள்ளன. இந்த எண் ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்” என்றார்.
15 ஆயிரம் மரக்கன்றுகள்
மரக்கன்றுகள் மற்றும் செடிகளை உருவாக்கும் ஒரு பசுமைக் குடிலை ஐசிஎப் கிழக்கு காலனி குடியிருப்புப் பகுதியில் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இதில் பல்வேறு செடிகள், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஐசிஎப் குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் அவற்றை நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இங்கிருந்து மரக்கன்றுகள் எடுத்து ஐசிஎப் வளாகத்தில் அதிகளவில் மரங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளவுள்ளது.
வில்லிவாக்கம், பெரம்பூர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஐசிஎப் வளாகத்தில் உள்ள ஏரி நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.1 கோடி செலவில் இந்த ஏரி தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதால் தற்போது அதிகஅளவில் நீர் தேங்கியுள்ளது. கரையோரமாக அழகிய பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT