Last Updated : 09 Aug, 2018 09:34 AM

 

Published : 09 Aug 2018 09:34 AM
Last Updated : 09 Aug 2018 09:34 AM

பிறவிப் போராளி கருணாநிதிக்கு சேலம் புகுந்த வீடு போன்றது: 69 ஆண்டுகால நண்பரின் நினைவு பகிர்வு

பிறவிப் போராளியான கருணா நிதி, தோல்விகளைப் பொருட்படுத் தாமல் உடனடியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்படத் தொடங்கி விடுவார். அவரைப்போல மன வலிமை கொண்டவர்களைப் பார்க்கமுடியாது என்று கூறுகிறார் சேலத்தில் உள்ள அவரது 69 ஆண்டுகால நெருங்கிய நண்பர் வெங்கடசாமி.

சேலத்துக்கும்திராவிட கட்சி களுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. அதிலும் திராவிட இயக்க தலைவர்களில் முக்கிய மானவரான திமுக தலைவர் கருணாநிதிக்கு திருவாரூரை தாய் வீடு என்று சொல்லும்போது சேலத்தை அவரது புகுந்த வீடு என்று குறிப்பிடும் அளவுக்கு சேலத் துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவாரூரில் வசித்த போது நாடகத்துறையில் இருந்த அவர் திரைப்படத் துறைக்கு வந்தது சேலத்தில்தான்.

சினிமாத்துறையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கோலோச்சத் தொடங்கிய காலம். மந்திரிகுமாரி நாடகத்தின் வெற்றியை அறிந்த பாடலாசிரியர்கள் கவி கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் கருணாநிதியின் எழுத்து திறமை, அவரது மந்திரிகுமாரி நாடகத்தின் வெற்றி ஆகியவை குறித்து மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமை யாளரான டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து, கருணாநிதியை திருவாரூரில் இருந்து சேலத்துக்கு அழைத்து வந்த டி.ஆர்.சுந்தரம், மந்திரி குமாரி நாட கத்தை திரைப்படமாக தயாரிப்பது குறித்து கூறியதுடன் அதற்கு கதை, திரைக்கதையை கருணாநிதி எழுதிக் கொடுக்கவும் கேட்டுக் கொண்டதுடன் அதற்காக மாதம் ரூ.500 ஊதியம் வழங்கவும் செய்தார். இந்த சம்பவம் நடை பெற்றது 1949-ம் ஆண்டு.

திரைக்கதை, வசனம் எழுத ஒப்புக்கொண்ட கருணாநிதி, திமுக கட்சி கூட்டத்துக்குதாம் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லாதிருந்தால், மந்திரிகுமாரி திரைப்படத்துக்கு பணிபுரியசம்மதிப்பதாக நிபந்தனை விதித்தார். இதனை டி.ஆர்.சுந்தர மும் ஏற்றுக் கொண்டார். இதன்பின்னர் மாடர்ன் தியேட்டர் ஸில் உதவி இயக்குநராக பணி புரிந்து கொண்டிருந்த சோமு என்பவர் மூலமாக கருணாநிதிக்கு சேலத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட சாமி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அஞ்சல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடசாமி, சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் கருணா நிதிக்காக வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்தார். அன்றைக்கு கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்பு இன்றைக்கும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது என்று மலரும் நினைவு களைப் பகிர்ந்துக்கொண்ட வெங்கடசாமி, தமது நண்பர் கருணாநிதிக்கு சேலம் புகுந்த வீடு போன்றது என்கிறார். கருணாநிதியுடனான 69 ஆண்டு கால நட்பு குறித்து ஆர்.வெங்கடசாமி (87) நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

கோட்டை பகுதியில் மாதம் ரூ.50 வாடகைக்கு பார்க்கப்பட்ட வீட்டில் கருணாநிதி தமது தாயார் அஞ்சுகம், மனைவி தயாளு, மகன் மு.க.முத்து ஆகியோருடன் குடியேறினார். எழுதுவதற்கென்று தனியாக இடத்தை தேடமாட்டார். அவருக்கு பேப்பரும் பேனாவும் இருந்தால் போதும் எழுதிக் கொண்டே இருப்பார். ஏற்காடு அடிவாரத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்ததால், நானும் கருணாநிதியும் அடிக்கடி ஏற்காடுமலைப்பாதை யில் உள்ள 60 அடி பாலத்துக்கு சென்று அங்கு அமர்ந்து மனம் விட்டு பேசுவோம். கருணாநிதி முதல்வரான பின்னரும் கூட சேலத்துக்கு எப்போது வந் தாலும், என்னை அழைத்துக் கொண்டு ஏற்காடு மலையில் உள்ள பாலத்துக்கு சென்று அங்கு அமர்ந்து ஓரிரு மணி நேரமாக மனம்விட்டு பேசிவிட்டுதான் செல்வார்.

இதனிடையே, அவரது வசனத் தில் உருவாகத் தொடங்கிய மந்திரிகுமாரி படத்துக்கு கதா நாயகனை டி.ஆர்.சுந்தரம் தேடிக் கொண்டிருந்தார். தமது நண்ப ரான எம்.ஜி.ராமச்சந்திரனை மந்திரிகுமாரி படத்துக்கு கதாநாயக ராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியதை டி.ஆர்.சுந்தரம் ஏற்றுக் கொண்டார். ஆனால், இயக்குநரான எல்லீஸ் ஆர்.டங்கன் எம்.ஜி.ராமச்சந்திரனின் தோற்றம் மந்திரிகுமாரி திரைப்படத்துக்கு சரியாக வராது என்று மறுத்தார். ஆனால், எம்.ஜி.ராமச்சந்திரனை ஏற்காவிட்டால், தாம் கதை, வசனம் எழுதப்போவதில்லை என்று கருணாநிதி உறுதியாக கூறினார். இதையடுத்து எம்.ஜி.ராமச் சந்திரனை டி.ஆர்.சுந்தரம் ஏற்றுக் கொண்டார்.

சேலத்தில் இருந்த காலத்தில் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை தோறும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு செல்வார். அவருடன் நானும் சென்று வரு வேன். அப்போது கருணாநிதியின் தாயார் அஞ்சுகம், தமது மகன் கருணாநிதியை கவனமாக பார்த் துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்வார். எங்கள் வீட்டில் கருணாநிதியும், அவரது வீட்டில்நானும் அடிக்கடி சாப்பிடு வோம். கருணாநிதி எப்போதுமே உணவில் அக்கறை செலுத்த மாட்டார். இருப்பதை திருப்தியாக சாப்பிடுவதுடன், துரிதமாகவும் சாப்பிட்டு விடுவார்.

என்னை மரியாதையுடன் ‘சார்’ என்று அழைக்க ஆரம்பித்தவர், பின்னாளில் யாரும் எட்ட முடியாத வளர்ச்சியை அடைந்த பின்னரும் கூட, ‘சார்’ என்று அழைப்பதை விடவில்லை. ஒரு கட்டத்தில், தாம் எழுதிய மந்திரிகுமாரி திரைப் பட வசனத்தில் திருத்தம் செய்யப் பட்டிருந்ததை அறிந்த அவர், இதுபோன்று செய்வது தமது சுய மரியாதையை பாதிக்கும் என்று கூறியதோடு, இனியும் திருத்தங்கள் தொடர்ந்தால் மந்திரி குமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுத முடியாது என்று மறுக்க, அந்த நிபந்தனையும் ஏற்கப்பட்டது. எதிர் பார்த்தது போலவே, கருணாநிதி யின் திரைக்கதை, வசனத்தில் உருவான மந்திரிகுமாரி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மந்திரிகுமாரி வெற்றியை பாராட்டிய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சேலத்தில் கருணா நிதியை சந்தித்து, தாம் அடுத்து தயாரிக்கவுள்ள மணமகள் திரைப் படத்துக்கு கருணாநிதி தான் வசனம் எழுத வேண்டும் என்றுகூறி, அதற் காக ரூ.10,000-ஐ கருணாநிதிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்தார். அந்த காலகட்டத்தில் இது மிகப் பெரும் தொகை என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழக முதல்வராக உயர்ந்த பின்னரும் என்னிடமும், எங்கள் குடும்பத்தினரிடமும் அதே நட்புடன் இருந்து பழகி வந்தார்.முரசொலி பவள விழா மலரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எனக்கு கொடுத்தனுப்பி அது என்னிடம் வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டார். கனி மொழி சேலத்துக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் நலனை விசாரித்து செல்வார். முரசொலி மாறன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தமக்காக இன்ன உணவு சமைக்க வேண்டும் என்று உத்தரவிடும் அளவுக்கு எங்களிடம் உரிமை கொண்டவர்.

தோல்விகளை எப்போதுமே வெகு எளிதாக எடுத்துக் கொள் ளும் பக்குவம் கொண்டவர் கருணா நிதி தேர்தலில் எப்படிப்பட்ட பின் னடைவைசந்தித்தாலும் இதை யெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை செயல் படுத்துவோம் என்று கூறுவார்.

எவ்வளவு கடும் சோதனைகளை யும் கடந்து சென்று அதனை வெல் லக்கூடிய மனவலிமை கொண்ட வர். அவரைபோல மனவலிமை கொண்டவர்களைப் பார்க்க முடி யாது. கருணாநிதி ஒரு பிறவிப் போராளி. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x