Published : 08 Aug 2018 12:26 PM
Last Updated : 08 Aug 2018 12:26 PM
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் எண்ணற்ற பல நல்ல திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தியவர். சமூகநீதி மாற்றத்துக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு புரட்சி செய்துள்ளார். அந்தத் திட்டங்களும், அறிவிப்புகளில் சிலவற்றையும் பார்க்கலாம்.
1. தமிழகத்தில் போக்குவரத்து துறையைத் தேசியமாக்கல்
2. 1500 பேர் கொண்ட கிராமங்களுக்குச் சாலைவசதி ஏற்பாடு
3. தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் அமைத்தல்
4. தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் அமைத்தல்
5. முதன்முதலாக இலவச கண்சிகிச்சை முகாம் அமைத்தல்
6. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையத்தைத் தொடங்கியது
7. மனிதர்களை அமரவைத்து மனிதர்களே இழுக்கும் கை ரிக்சா முறையை ஒழித்து சைக்கிள் ரிக்சா முறை கொண்டு வரப்பட்டது.
8. ஒடுக்கப்பட்டோருக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டம்
9. வாடகை வீட்டில் குடியிருப்போருக்காக குடியிருப்போர் வீட்டுச் சட்டம்
10. நாட்டிலேயே முதல் முறையாகக் காவல்துறை ஆணையம் அமைத்தார்.
11. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான துறை அமைத்தார்
12. அரசியலமைப்பில் பிசி பிரிவினருக்கு 31 சதவீதம் இட ஒதுக்கீடு, எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.
13. மே 1-ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறையை கொண்டு வந்தார்.
14. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
15. சேலத்தில் இரும்பு தொழிற்சாலை அமைத்தல்
16. தூத்துக்குடியில் பெட்ரோலியம் மற்றும் ரசாயன தொழிற்சாலை கொண்டு வந்தார்.
17. சிட்கோ, சிப்கோ உருவாக்கியது.
18. உருது பேசும் முஸ்லிம்களை, தமிழ்பேசும் முஸ்லிம்களுடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார்
19. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு
20. பழங்குடியினருக்குத் தனியாக ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு
21. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளித்தல்
22. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை
23. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு
24. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம்
25. விதவைப் பெண்களுக்கு மறுமண உதவித் திட்டம்
26. நேரடி நெல் கொள்முதல் மையம்
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்
28. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தார்
29. மனோன்மனியம் சுந்திரனார், பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கினார்
30. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்
31. உள்ளாட்சிப்பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு
32. மெட்ராஸ் என்ற பெயரை சென்னையாக மாற்றியது
33. விதவைப் பெண்களுக்கு மருத்துவ, பொறியியல் கல்லூரியில் இடம்.
34. கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை அமைத்தது
35. தமிழுக்குச் செம்மொழி மாநாடு நடத்தியது
36. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது
37. பூம்புகார் கப்பல் நிறுவனம்
38. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
39. நெய்வேலியில் 2-ம் அலகு அனல்மின்நிலையம் கொண்டு வந்தார்
40. காவல்துறைக்குத் தனியாக ஆணையம் அமைத்தார்
41. அரசு ஊழியர்களுக்குக் குடும்ப நலவாரியம் அமைத்தார்
இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களைக் திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி கொண்டுவந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment