Published : 05 Aug 2018 09:42 AM
Last Updated : 05 Aug 2018 09:42 AM
ஆடிப்பெருக்கை முன்னிட்டு2019-ம் ஆண்டுக்கான காலண்டர் கள் தயாரிக்கும் பணிகள் சிவ காசியில் நேற்று தொடங்கின.
சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு அடுத்த படியாக இருப்பது அச்சகத் தொழில். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அடுத்த ஆண்டுக்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான தினசரி, மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் நேற்று தொடங்கியது.
தினசரி காலண்டர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கு மேற்பட்ட மாடல்களில் தயார் செய்யப்படு கின்றன. சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.
2019-ம் ஆண்டுக்கான புதிய வரவாக ரியல் ஆர்ட், பாயில்ஸ் கோல்டு, சில்வர் பாயில்ஸ், லேசர் பாயில்ஸ், டை கட்டிங், விஐபி காலண்டர், 3D காலண்டர் என 50-க்கு மேற்பட்ட மாடல்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படு கின்றன.
இவை, பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக் கது. மேலும் இவை குறைந்தபட்சம் ரூ.20 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விலையில் விற்கப்படுகின்றன. தினசரி காலண்டர் உற் பத்தியாளரும் , தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளருமான ஜெய சங்கர் கூறியதாவது:
காகிதம், அட்டை, அச்சு மை, தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் ஜிஎஸ்டியால் தினசரி காலண்டரின் விலை 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயரும் நிலை உள்ளது.
தமிழில் தயாரிக்கப்படும் தினசரி காலண்டர்களுக்கு, கடந்த ஆண்டு முதல் புதிதாக வரி விதிக்கப்பட்டதால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது. அச்சு மற்றும் டை கட்டிங் தரமாக இருப்பதால் சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
மேலும் இந்தியா மட்டுமல் லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் சிவகாசி காலண்டர்கள் அனுப்பி வைக்கப்படு கின்றன. கடந்த ஆண்டைப் போல தடையில்லாமல் மின்சாரம் கிடைத் தால், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து காலண்டர்களை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு களை நினைவுகூரும் வகையில் தயாராகும் மாத நாள்காட்டி.ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் உள்ள ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் காலண்டர் தயாரிப்பைத் தொடங்கிய பணியாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT