Last Updated : 10 Aug, 2018 07:50 AM

 

Published : 10 Aug 2018 07:50 AM
Last Updated : 10 Aug 2018 07:50 AM

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பிரிவு அலுவலகம் செயல்பட பசுமை தீர்ப்பாயம் அனுமதி: எந்தவிதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என நிபந்தனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில், அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல் பட தேசிய பசுமைத் தீர்ப் பாயம் நேற்று அனுமதி அளித் தது. அதேவேளை உற்பத்தி பிரிவு இயங்க தடை நீடிக்கிறது.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர் லைட் ஆலையை மூட தமிழக அரசு மே 28-ம் தேதி உத்தரவிட்டது.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, வேதாந்தா குழுமம் சார்பில் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், `ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண் டும்’ என்றும், தெரிவித்து இருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. `வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

கடந்த ஜூலை 5-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா குழுமத்தின் மனு குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஜூலை 30-ம் தேதி விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக் காலத் தடை விதிக்க வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையை ஏற்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் உறுப்பினர்கள் நீதிபதி ஜாவத் ரஹீம், எஸ்.பி.வாங்க்டி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது, வேதாந்தா குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஆலையில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே, குறைந்தபட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்று வாதாடினார்.

ஆனால், தமிழக அரசு தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல் கள் தொடர்பான முக்கிய மான கோப்புகளை அவர்கள் அழித்து விடக்கூடும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் தலைமை யிலான தேசிய பசுமை தீர்ப்பாயம், `ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாக பிரிவு அலுவலகம் செயல்படலாம். அதேசமயம், எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது. இதனை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மாசு குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆலை நிர்வாகம் வரவேற்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வரவேற்றுள்ளது. ஆலையின் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், `எங்களது மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு உகந்தது என ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறோம்.

மேலும், ஆலைக்குள் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்பட அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இடைக்கால உத்தரவையும் வரவேற்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, ``தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு நகல் கிடைத்த பிறகே எதுவும் கூறமுடியும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x