Published : 14 Aug 2018 09:09 AM
Last Updated : 14 Aug 2018 09:09 AM
மக்களின் அடிப்படை தேவையை உணர்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, போக்குவரத்து துறையை குழந்தைபோல் வளர்த்து, கண்ணின் இமைபோல் காத்தார் என இத்துறையில் 8 ஆண்டுகள் அமைச்சராக இருந்த எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டு திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதும், போக்குவரத்து துறையை நாட்டு டமையாக்கினார். தனது நம்பிக் கைக்கு உரியவரான கருணாநிதி யிடம் போக்குவரத்து துறையை ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, குக்கிராமங்களுக்கு கூட பேருந்து கள் செல்ல வழிவகை செய்யப் பட்டது. கிராமங்களில் வசிக்கும் பின்தங்கிய மக்களின் வசதிக்காக மினி பஸ்களும் கருணாநிதி ஆட்சி காலத்தில் அறிமுகம் செய் யப்பட்டன.
மக்களின் அடிப்படை தேவையை உணர்ந்த திமுக தலை வர் கருணாநிதி, போக்குவரத்து துறையை குழந்தைபோல் வளர்த்து, கண்ணின் இமைபோல் காத்தார் என போக்குவரத்து துறை யில் 8 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த எஸ்.முத்துசாமி தெரிவித் துள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த இவர், எம்ஜிஆர் மற்றும் ஜெய லலிதாவின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர். அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுக வில் இணைந்தார். தற்போது, திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் மேலும் கூறிய தாவது:
போக்குவரத்துக்கு என தனி யாக துறையை உருவாக்கியதற் கும், இத்துறையை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றதற் கும் திமுக தலைவர் கருணாநிதி தான் முக்கிய காரணம். குறைந்த கட்டணத்தில் சீரான போக்குவரத்து வசதியை மக்களுக்கு ஏற் படுத்தி தந்தால், கிராமப்புற மக்க ளுக்கு போக்குவரத்து வசதி கிடைப் பதுடன் அவர்களின் பொருளா தாரமும் படிப்படியாக முன்னேற்ற மடையும் என அவர் நம்பினார். இதை இலக்காக கொண்டே பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்தினார்.
நான் கடந்த 1980 முதல் 1987 வரையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தேன். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பங்களிப் போடு பொறியியல் மற்றும் மருத் துவ கல்லூரிகளைத் தொடங்க அப் போதைய முதல்வர் எம்ஜிஆர் அனுமதித்தார் அப்போது, மொத்தம் 72 ஆயிரம் தொழிலாளர் கள் இருந்தனர். இதில், குறைந்தபட்சமாக 60 ஆயிரம் தொழிலாளர்கள் ஆதரவு தெரி வித்தால் மட்டுமே பொறியியல் மற் றும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியும். ஆனால், தொழி லாளர்கள் பல்வேறு தொழிற் சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். மேலும், அரசு நிதி மூலம் கல்லூரிகளைத் தொடங்க வேண்டுமென தொழி லாளர்கள் தரப்பில் வலியுறுத் தப்பட்டது.
இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின. இதை படித்துப் பார்த்த திமுக தலைவர் கருணாநிதி, தொமுச மாநில நிர்வாகிகளை நேரில் அழைத்து விசாரித்தார். தொழி லாளர்களின் பங்களிப்பு இல்லா விட்டால், நீங்கள் எப்படி அந்த கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெற முடியும் என எடுத்துரைத் துள்ளார். அப்படியே, அரசு அளித்தாலும் கூட, பிறகு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் (தொழிலாளர்கள்) பணம் கட்டி சேருவது தான் சரி என கருணாநிதி அறிவுறுத்தினார்.
அதன்பிறகு, பெரும்பாலான தொழிலாளர்கள் ஆதரவு அளித்த தால் ஈரோட்டில் பொறியியல் கல் லூரியும், பெருந்துறையில் மருத் துவக் கல்லூரியும் தொடங்க முடிந்தது.
இதன்மூலம் போக்குவரத்து தொழிலாளிகளின் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் மருத் துவர்களாகவும், பொறியாளர் களாகவும் உருவாகியுள்ளனர். இதுமட்டுமல்ல, பொதுநலன் நோக் கத்தோடு திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், பல்வேறு நல்ல திட் டங்களுக்கு கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எஸ்.முத்துசாமி கூறி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT