Published : 14 Aug 2018 08:08 AM
Last Updated : 14 Aug 2018 08:08 AM
பாலாறு பெண்ணையாறு நதிகளை இணைக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால், கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர், திருவண் ணாமலை உட்பட 7 மாவட்ட மக் களுக்கு குடிநீர் வசதியும் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங் களின் பாசன வசதியும் மேம் படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சினையைத் தீர்க் கவும் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு தண்ணீர் பெறு வதற்காகவும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாலாறு பெண்ணையாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கி யுள்ளது. இதையடுத்து இந்த நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல் லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலையில் பாலாறு உற்பத்தியாகிறது. பாலாறு, கர்நாடக மாநிலத்தில் 93 கிலோ மீட்டர் பயணித்து, ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் கடந்து வந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கிலோ மீட்டர் தூரம் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக் கிறது.
கர்நாடகத்தில் பாலாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் வளர்க்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதாலும் ஆந்திரா வில் பாலாறு கடந்து வரும் பாதையில் அம்மாநில அரசு சிறியதும், பெரியதுமாக 28 தடுப்பணைகளைக் கட்டியுள்ள தாலும் தமிழகத்தில் பாலாறு வறண்டு போய்விட்டது.
கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகிறது தென் பெண்ணையாறு. தமிழ் நாட்டில் சுமார் 320 கிலோ மீட்டர் தூரம் பாயும் இந்த ஆறு, கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொடியாளம் தடுப்பணையில் தமிழகத்துக்குள் நுழைகிறது.
அந்த அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தர்மபுரி மாவட்டம் வழியாக, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து சேர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பெண் ணாறு மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இப்போதும் பாலாறு ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதையும் பெண் ணையாறின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், “பாலாறு பெண்ணையாறு நதிகள் இணைப்புக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இம்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும்” என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நதிகள் இணைக்கப் படும்போது தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர் கிருஷ்ணகிரி நெடுங்கல் அணையில் இருந்து சந்தூர் வழியாக வாணியம்பாடி அருகே பாலாற்றின் உபநதியான கல்லாற்றில் கலக்கும்.
இதுகுறித்து தமிழக அரசு மத்திய நீர்வள ஆணையத்துக்கு கருத்துரு அனுப்பி பல ஆண்டுகள் இத்திட்டம் குறித்து ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT