Published : 10 Aug 2018 08:15 AM
Last Updated : 10 Aug 2018 08:15 AM
கடந்த 21 ஆண்டுகளாகத் தமிழ கத்தில் உள்ள பொறியியல் கல் லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வைச் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. கட்டிடக் கலை பொறியியலுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் குறை வாகவே உள்ளதால் அவர்களுக் கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கட்டிடக் கலை பொறியியல் கலந்தாய்வு இன்று (ஆக.10) நடைபெறவிருக்கிறது. பிளஸ் 2 மதிப்பெண்கள், NATA (நாட்டா) எனப்படும் தேசியக் கட்டிடக் கலை திறனாய்வுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடை பெறுகிறது. மருத்துவம், பொறி யியல் படிப்புகளுக்கு இணை யான தொழில்முறை படிப்பாகக் கட்டிடக் கலை இருந்தாலும் தமிழக அளவில் இப்படிப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.
முதலாவதாகப் பொறியியல் படிப்புக்கும் கட்டிடக் கலை படிப் புக்கும் இடையிலான வேறுபாட் டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மேக்கான்ஸ் ஊட்டி கட்டிடக் கலை கல்லூரியின் தலைவரான முரளிகுமரன்.
“பொறியியல் போலன்றி கட்டிடக் கலை என்பது வடி வமைப்பு சார்ந்த துறையாகும். இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் கட்டிடக் கலையானது நுண்கலையின் பிரிவாகவே பார்க்கப்படுகிறது. செயல்முறை கலையாக இது கருதப்படுகிறது. ஆகையால், கட்டிடக் கலையைக் கற்க விரும்பும் மாணவர்கள் அதை எங்கு படிக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் கட்டிடக் கலை படிப்பைக் காட்டிலும் பிரத்யேக மான கட்டிடக் கலைக் கல்லூரியில் இப்படிப்பை மேற்கொள்வது நல்லது. வகுப்பறையில் கற்பிக் கப்படுவதைக் காட்டிலும் செயல் முறை வழியாக தனித்திறனையும் படைப்பாற்றலையும் கொண்டு பயில வேண்டிய படிப்பு இது. ஆகையால், அரசு அங்கீகாரம் பெற்ற நல்ல கல்லூரியில் பி.ஆர்க். படித்தல் சிறப்பு.
பொதுவாகக் கட்டிடக் கலை படித்தவர்கள் கட்டுமானத் துறை யில் மட்டுமே பணிவாய்ப்பு பெற முடியும் என்கிற மேம்போக்கான புரிதல் நிலவுகிறது. ஆனால், திரைத் துறை, நுண்கலைத் துறை, மரச்சாமான் வடிவமைப்புத் துறை, கிராபிக்ஸ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது’’ என்கிறார்.
இந்நிலையில், நாளை (ஆக. 11) TANATA எனப்படும் தமிழ்நாடு கட்டிடக் கலை திறனாய்வுத் தேர்வு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. நாட்டா தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியவர்களும், நாட்டா எழுதாத மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதுவார்கள். ஆனால், இதில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.
‘‘2015-ம் ஆண்டுவரை வருடம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டா தேர்வை எழுத மத்திய அரசு அனுமதித்தது. பின்னர் 2016-ல் ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வை உரிய தேர்வு மையங்களின் வழியாக வருடத்துக்கு 5 முறை எழுதலாம் என்று சுருக்கப்பட்டது. பின்பு 2017-ல் ஒரே ஒரு முறை மட்டுமே தேசிய அளவிலான பி.ஆர்க். நுழைவுத் தேர்வை எழுத முடியும்; நீட் தேர்வைப் போல இதுவும் நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்படும் என்கிற விதி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இப்படியாக நாட்டா தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் பெறப்பட்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது.
ஆனால், பிளஸ் 2 மாணவர்களில் பெரும்பாலோர் பொதுத் தேர்வை ஏப்ரலில் எழுதி முடித்த பிறகுதான் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பதை முடிவுசெய்வதால் அவர்களுக்கென மாநில அளவிலான பி.ஆர்க். தேர்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு முடிவுசெய்யப்பட்டது. இதன்படி 2017-ல் தமிழ்நாடு கட்டிடக் கலை திறனாய்வு தேர்வான டானாட்டா (TANATA) ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் நாளை தான் இத்தேர்வு நடைபெறவிருக்கிறது.
ஆனால், இன்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு நாளை பி.ஆர்க். படிப்புக்கான மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது வெறும் கண் துடைப்பே. ஏனென்றால், இத்தகைய தேர்வு மேனேஜ்மென்ட் கோட்டாவில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வழிவகை செய்கிறது.
இதை மாநிலக் கல்வித் துறை கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்கூட்டியே இத்தேர்வை நடத்த வேண்டும். அப்படியானால் மட்டுமே கட்டிடக் கலை படிப்பை படிக்கும் ஆர்வமும் திறனும் உள்ள தமிழக மாணவர்களும் இப்படிப்பை மேற்கொள்வதற்கான சமமான வாய்ப்பு சாத்தியமாகும்’’ என்று சுட்டிக்காட்டுகிறார் முரளிகுமரன்.
கணிதத் திறனும் ஆங்கில மொழித் திறனும்தான் கட்டிடக் கலை படிப்புக்கான ஆதாரம். ஆகையால், பிளஸ் 1, பிளஸ் 2-வில் இந்தப் பாடங்களைத் தேர்வு செய்து படித்த எந்தக் குரூப் மாணவர்களும் கட்டிடக் கலை படிப்புக்குத் தகுதியாவார்கள். நுழைவுத் தேர்வைப் பொறுத்த வரையில், மொத்தம் 200 மதிப்பெண்களுக்கான 2 தேர்வுகள் நடத்தப்பட்டும். முதல் தேர்வு மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இதில் கணிதம் (40 மதிப்பெண்), பொதுத் திறன் (80 மதிப்பெண்கள்) சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். ஒன்றரை மணிநேரம் நடத்தப்படும் இத்தேர்வை முடித்தவுடன் 80 மதிப்பெண்களுக்குரிய இரண்டாம் தேர்வு நடத்தப்படும்.
இதில் மாணவர்களின் வரையும் திறன் சோதிக்கப்படும். இரண்டே கேள்விகள்தான். ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும். முழுக்கக் முழுக்க கைகளால் வரைந்து தங்களுடைய படைப்பாற்றலையும் அளவு விகிதத்தையும் ஓவிய நுட்பத்தையும் வெளிப்படுத்து வதற்கான வாய்ப்பு இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT