Published : 16 Aug 2018 09:41 AM
Last Updated : 16 Aug 2018 09:41 AM

விமான எரிபொருளுக்கான வரி 29-லிருந்து ஒரு சதவீதமாக குறைப்பு: உள்நாட்டு சேவை அதிகரித்து கட்டணம் குறைய வாய்ப்பு

விமான நிலையங்களில் இரவில் நிறுத்தப்படும் விமானங்களுக்கான வாட் வரி 29 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட் டுள்ளதால், உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிப்பதுடன், கட்ட ணமும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களி டையே பயணிப்போரின் எண் ணிக்கை அதிகரிக்கும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங் களில் விமானநிலையங்கள் உள் ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், அனைத்து விமான நிலையங்களிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமான நிலையங்களில் இரவு நேரத்தில் விமானங்களை நிறுத்திச் செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரும் பாலான விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் மையங்களும் உள்ளன. இரவில் தங்கும் உள் நாட்டு விமானங்கள், விமானத்துக்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர், காலை யில் புறப்பட்டுச் செல்லும். எனினும், விமான எரிபொருள் விலை காரணமாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தங்கு வதை பெரும்பாலான விமானங்கள் தவிர்த்து, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கும் நிலை உள்ளது. இதனால் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், விமான எரி பொருளுக்கான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து ஒரு சத வீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மேற்கு மண்டல மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர் டி.நந்தகுமார் `இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியதாவது:

கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருந் தும், பெரும்பாலான விமானங்கள் இரவில் விமானங்களை நிறுத்து வதில்லை. வெளி மாநிலங்களில் விமானங்களை நிறுத்திக் கொள் கின்றன. இதனால் காலை நேரங் களில் பல்வேறு நகரங்களுக்குப் புறப்பட்டுச் செல்ல முடியவில்லை.

இதுதொடர்பாக கொங்கு குளோ பல் ஃபோரம் சார்பில் தமிழக முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரி களைச் சந்தித்து, விமான எரி பொருளுக்கான வாட் வரியைக் குறைத்தால், அதிக விமானங்கள் தமிழக விமான நிலையங்களில் இரவு தங்கி, காலையில் புறப் பட்டுச் செல்லும். அதன்மூலம் கூடுதல் விமான சேவைகள் கிடைக் கும். தொழில் துறையினர் மட்டு மின்றி, மாணவர்கள், மருத்துவக் காரணங்களுக்காக பல்வேறு நகரங்களுக்குச் செல்வோர் பயன டைவர் என வலியுறுத்தினோம்.

இதை ஏற்று, சென்னையைத் தவிர்த்த மற்ற விமான நிலையங் களில் இரவு தங்கி, காலையில் புறப்பட்டுச் செல்லும் விமானங் களுக்கான எரிபொருள் வரியை அரசு பெருமளவு குறைத்துவிட்டது. ஏறத்தாழ வரியை நீக்கியுள்ளது என்றே சொல்லலாம். இதன் மூலம் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் இரவு தங்கும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக் கும். மேலும், விமானக் கட்டணமும் குறையும்.

பெரும்பாலான விமான நிறு வனங்கள், விமான எரிபொருள் கட்டணத்தைக் காரணம் காட்டி, விமானக் கட்டணத்தை குறைக் காமல் உள்ளன. மேலும், அவர்களது வரவு-செலவு அறிக் கையில் நஷ்டத்தையே காண்பிக் கின்றன. வாட் வரியைக் குறைத் துள்ளதால், இனி விமானக் கட்டணத்தையும் அவை குறைக் கும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கெ னவே ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடருவ துடன், கூடுதலாக பல்வேறு நகரங் களுக்கு விமானங்கள் இயக் கப்படும். மேலும், சரக்கு விமானப் போக்குவரத்துக்கும் உதவியாக இருக்கும்.

அண்மையில், கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு வுக்குச் செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இனி அந்த நிலை மாறும். காலை நேரத்தில் கூடுதல் விமானங்கள் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என்பதால், முதல் நாளே வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்க வேண்டிய நிலை இருக்காது. இதனால், காலமும், செலவும் வெகுவாகக் குறையும். இதற்காக தமிழக முதல்வர் கே.பழனிசாமி, உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரி களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை விமானநிலைய இயக் குநர் ஆர்.மகாலிங்கம் கூறும்போது, ``கோவை விமானநிலையத்தில் 8 விமானங்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளது. எரிபொருள் விலை குறையும் என்பதால், இனி அதிக விமானங்கள் கோவையில் இரவு தங்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதனால், காலை நேர சேவைகள் அதிகரிக்கும். விமானக் கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், பல்வேறு சரக்குகளைக் குறைந்த நேரத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல் லவும் உதவியாக இருக்கும். தமிழ கத்தின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் மேம்படும். ஏற்கெனவே, வட மாநில விமான நிலையங்களில் வரி குறைவு காரணமாக எரிபொருள் விலை குறைவாக இருந்ததால், அங்கு அதிக விமானங்கள் நிறுத்தப் பட்டன’’என்றார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் விமான எரிபொருள் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ``ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.70-ஆக உள்ள நிலையில், வரி குறைப்பு காரணமாக ஏறத்தாழ ரூ.15 குறைந்து, சுமார் ரூ.55-க்கு விற்கப்படும். இதனால் தமிழகத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது அதிகரிக்கும். விமான சேவைகளும் மேம்படும். விலையைக் குறைப்பது குறித்து, அந்தந்த விமான நிறுவனங்கள் முடிவெடுக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x