Published : 01 Aug 2018 07:41 AM
Last Updated : 01 Aug 2018 07:41 AM
தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) மேல்முறையீட்டு மனுக் களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதி ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அலுவலகங்களின் செயல் பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் அரசு துறைகளிட மிருந்து மக்கள் தகவல்களை கேட்டுப் பெறவும் கடந்த 2005-ல் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) அமல்படுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு அரசுத் துறை அலுவலகத்திலும் ஒரு பொதுத் தகவல் அலுவலர், ஒரு மேல் முறையீட்டு அலுவ லர் பொறுப்புகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.
தகவல் கோருபவர் பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்ய லாம். ஆர்டிஐ விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்புவது நல்லது. நாம் அரசு துறைகளிடமிருந்து எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும். தகவல் பெற விண்ணப்ப கட்டணம் ரூ.10 மட்டுமே. நகல் எடுக்க ஒரு பக்கத்துக்கு ரூ.2 பெறப்படுகிறது.
30 நாட்களுக்குள் பதில் கொடுக்கப்படவில்லை எனில், அதே துறையின் மேல் முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்கு கட்டணம் இல்லை. மேல்முறையீடு செய்யும்போது ஏற்கெனவே நாம் விண்ணப்பித்த மனுவின் நகலை இணைக்க வேண்டும். முதல் மேல் முறையீடு அனுப்பிய 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்க வில்லை என்றாலும் கொடுத்த தகவலில் திருப்தி இல்லை என்று நினைத்தாலும் தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு 2-வது மேல்முறை யீட்டு மனுக்களை தபால் மூலம் அனுப்பும்போதும் அதன்பிறகு உத்தரவுகளை பெறுவதற்கும் கால விரயம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க மனுதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உத்தரவு பெறும் வசதியை மாநில தகவல் ஆணையம் ஏற்படுத்த உள்ளது. மாநில தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா இதற்கான நவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக மாநில தகவல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
மாநில தகவல் ஆணையத்தின் www.tnsic.gov.in என்ற இணைய தளத்தில் 2-வது மேல்முறையீட்டு மனுக்களை 24 மணி நேரமும் விண்ணப்பிக்கும் வசதி இந்த வார இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விடும். அதன்படி, மனுதாரர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், வீட்டு முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் அதன்பிறகு, அவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாஸ்வேர்டு (ஓடிபி) அனுப்பப்படும். அதைவைத்து லாகின் செய்து கொள்ளலாம்.
அதைத்தொடர்ந்து, பொது தகவல் அலுவலருக்கு அனுப் பிய மனுவின் நகல், முதல் மேல்முறையீடு செய்த மனுவின் நகல் ஆகிய ஆவணங்களை பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை. பின்னர், எப்போது விசாரணை நடை பெறும் என்ற தேதி விவரம் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இதன்மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும்.
இதுதவிர, அரசு இ-சேவை மையங்கள் மூலமும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும் வசதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT