Published : 17 Aug 2018 09:19 AM
Last Updated : 17 Aug 2018 09:19 AM
கேரளாவில் பணிபுரியும் மது ரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, கடந்த 10 நாட்களாக வீட்டுக்கே செல்லாமல் தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களைப் பெற் றுக் கொடுப்பதும், மீட்புப் பணி யில் ஈடுபடுவதுமாக செயல்பட்டு, அம்மாநில மக்களின் பாராட்டு் களைப் பெற்றுள்ளார்.
பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரும், புதிருமாக செயல்படுகின் றன. இப்பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் இரு மாநிலத்துக்கும் இடையே பதற்றமும், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.
அதேநேரத்தில், இரு மாநில மக்களும் அவரவர்களுக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் போது ஒருவர் மற்றவர்களுக்கு தோள் கொடுப்பதும் தொடருகிறது. அதற்கு உதாரணம் சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயலையும், தற்போது கேரளாவை சூழ்ந்துள்ள வெள்ளத்தையும் குறிப்பிடலாம்.
சென்னையில் வெள்ளம் ஏற் பட்டபோது, கேரள மக்கள் அங் கிருந்து தமிழகத்துக்கு அதிகமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.
அதேபோல், கேரளாவில் தற் போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் அரிசி, துணிகள், சமையல் பாத்திரங் கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கின்ற னர்.
கேரளாவில் பெரும் மழைக்கு அனைத்து அணைகளும் நிரம்பி விட்டதால் வரலாறு காணாத பேர ழிவு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் மக்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலை யில், கேரளாவில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்ஜி.ராஜமாணிக்கம், தனது நண்பர்கள் உதவியுடன் சொந்த மாவட்டமான மதுரையில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தமிழக மக்களும், தன்னார்வ அமைப் பினரும் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களை ஒருங் கிணைத்து அவற்றை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார்.
மதுரை நேத்ராவதி வலி நிவாரண மறுவாழ்வு மையம், வள்ளலார் மன்றம், இறையருள் மன்றம் ஆகிய அமைப்புகள் மூலம் பொதுமக்கள் வழங்கும் அரிசி மூட்டைகள், வேட்டி, சேலை, கைலி, போர்வைகள், மருந்துகள் ஆகியவற்றைப் பெற்று வாகனங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
இவர் கொச்சி ஆட்சியராக இருந்தபோது ‘அன்புடன் கொச்சி’ என்ற அமைப்புடன் கைகோர்த்து, அங்குள்ள மக்களுடன் இணைந்து அவரே நீர்நிலைகளைத் தூர்வாரி னார். தற்போது இவர் உணவு பாதுகாப்புத் துறை ஆணையரா கவும், கேரள மாநில மென்பொருள் நிறுவன மேலாண்மை இயக்குநரா கவும் உள்ளார்.
மதுரை மாவட்டம் திருவாத வூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தமிழ் வழியில் கல்வி படித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கேரளா வில் அவரது செயல்பாடுகளைப் பார்த்து அந்த மாநில அரசு ராஜ மாணிக்கத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப் பாளராக நியமித்துள்ளது.
இவர், கடந்த 10 நாட்களாக தனது வீட்டுக்குச் செல்லாமல் வெள்ளம் பாதித்த வயநாடு, கொச்சி, இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய, பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நிவா ரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பிடும் உணவுகளை வாங்கிச் சாப்பிடும் அவர், மக்க ளோடு மக்களாகப் பணிகளிலும் ஈடுபடுகிறார்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ஜீப்பில் சென்றும், ஜீப் செல்ல முடியாத பகுதிகளுக்கு கொட்டும் மழையில் நடந்து சென்றும் மக்க ளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கேரள மக்களின் கவ னத்தையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தனது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெள்ளத்தில் தவிக்கும் கேரளா வுக்கு உதவ தமிழக மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் வைத் துள்ளார். கேரளாவில் செயல் படக்கூடிய ‘அன்புடன் கொச்சி’ மற்றும் ‘சிஜே’ என்ற தன்னார்வ நிறுவனங்களைப் பயன்படுத்தி, மதுரை மாவட்டத்தில் கல்வியில், வேலைவாய்ப்பில் பின்தங்கிய கிராமங்களைத் தேர்ந்தெடுத்து உதவிகளைச் செய்து வந்த எம்ஜி.ராஜமாணிக்கம், தற்போது அதே சொந்த மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும் உதவி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT