Published : 01 Aug 2018 09:15 AM
Last Updated : 01 Aug 2018 09:15 AM
நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) முறைகேட்டைத் தடுக்க குடும்ப அட்டை தாரர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்கள் வாங்கிய பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டறியும் புதிய முறையை உணவுத் துறை அறிமுகப் படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் நியாயவிலைக் கடைகளில் இரு வழிகளில் அதிக மாக முறைகேடுகள் நடந்தன. ஒருபுறம், ஏராளமான குடும்ப அட்டைகளைச் சிலர் எடுத்து வந்து மொத்தமாக அரிசி, சர்க் கரை உள்ளிட்டவற்றை வாங்கி வெளிச்சந்தையில் விற்று வந்தனர். மறுபுறம் நியாய விலைக் கடை ஊழியரே பலரது குடும்ப அட்டைகளில் பொருட்கள் வாங்கியதாகப் பதிவிட்டு அப்பொருட் களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர்.
ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு மேற்கண்ட முறைகேடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக உணவுத் துறை கூறினாலும், நியாய விலைக் கடைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முறைகேடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், ரேஷன் கடையில் முறைகேட்டைத் தடுக்க புதிய முறையை உணவுத் துறை கையாள உள்ளது. அதன்படி, இத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நீங்கள் கடந்த மாதம்ரேசன் பொருட்கள் வாங்கினீர்களா, என்னென்ன பொருட்களை வாங்கினீர்கள்? அதுகுறித்து உங்களது செல்போனுக்கு குறுஞ் செய்தி வந்ததா, இல்லையா” என்று விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து உணவுத் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
சென்னையில் 85 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர் களுக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துள் ளதால் இதுவரை 80 சதவீதம் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள 20 சதவீதம் முறைகேட்டைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் பொருட்கள் விநியோகத்தில் குறைபாடுகள் இருந்தால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபப் கழக (சிவில் சப்ளை) தலைமை அலு
வலகத்தின் நுகர்வோர் பிரிவுக்கு 9980904040 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் தெரிவிக்க லாம்.
அந்த புகார்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, கள அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், முறைகேட்டைத் தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அதன்படி, ஏதாவது ரேஷன் கடையில் திடீரென கூடுதல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டிருந்தால், அந்த கடையில் உள்ள குறிப்பிட்ட சில குடும்ப அட்டைதாரர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கிறோம். அதில் முறைகேடு நடந் தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு அபராதம் விதிக்கிறோம். அதிக பட்சம் மூன்று முறை இவ்வாறு அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் முறைகேடுகள் நீடித்தால் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.
பயோ-மெட்ரிக் முறை
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள்
மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற பயோ-மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த பயோ-மெட்ரிக் முறை செப்டம்பர் மாதம் முதல் நடை முறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT