Published : 20 Aug 2018 09:30 AM
Last Updated : 20 Aug 2018 09:30 AM
சென்னையில் வெவ்வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளில் பணியின்போது 235 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். விசார ணைக்கு தனியாக செல்லும் போலீஸாரே அதிக அளவில் தாக்கப்பட்டுள்ளனர்.
மெரினாவில் வாகன சோதனை யில் ஈடுபட்ட மாரிக்கண்ணன் என்ற காவலர் மீது கடந்த ஜுன் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரது வலது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ஆயுதப்படை காவலர் மதன்குமார் தாக்கப்பட்டார். அவரது பல் உடைந்தது.
கடந்த மாதம் திருவான்மியூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய் வாளர் அப்துல் மஜீத் (52) தாக்கப்பட்டார். கடந்த ஜூலை 2-ம் தேதி ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரியம் அருகே ராயப்பேட்டை முதல்நிலை காவலர் ராஜவேலு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
இப்படி சென்னையில் வெவ் வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 235 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
போலீஸார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். ராயப்பேட்டை முதல்நிலை காவலர் ராஜவேலுவை தாக்கிய ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
ஆனாலும் போலீஸார் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின் றனர். இதற்கு பல்வேறு காரணங் கள் கூறப்பட்டாலும் விசாரணைக்கு தனியாக செல்லும் போலீஸாரே அதிக அளவில் தாக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. சீருடை அணியாமல் விசாரணைக்கு சென்ற போலீஸாரும் பல நேரங்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதி காரிகள் கூறும்போது, ‘‘பிரச்சினை ஏற்பட்டால் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி போலீஸார் செயல்படுகின்றனர். எதிர்பாராதவிதமாக சில நேரங் களில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் தனியாக செல்லும் போலீஸாரே பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பவ இடத்துக்கு போலீஸார் தனியாக செல்ல வேண் டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.
பொதுமக்கள் பாதிக்கப் படும்போது உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை (100) தொடர்பு கொள்கின்றனர். அடுத்த விநாடியே கட்டுப்பாட்டு அறை போலீஸார் சம்பந்தப்பட்ட எல்லை போலீஸாருக்கு இதுகுறித்து தெரிவிக்கின்றனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட போலீஸார், பாதிக் கப்பட்டவரிடம் சென்று அந்த தகவலை கட்டுப் பாட்டு அறை போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் தாமதமாக சம்பவ இடத்துக்கு செல்லும் போலீஸார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.
விஐபிக்கள் பாதுகாப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம், பாது காப்பு பணி, ரோந்து பணி உள் ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காவல் நிலையத்தில் பணியில் உள்ள போலீஸார் அனுப்பப்படு கின்றனர்.
இதனால், பல நேரங்களில் காவல் நிலையங்களில் யாரும் இருப்பது இல்லை. இந்த நேரத்தில்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சம்பவ இடத்துக்கு தனியாக செல்கிறோம் என தாக்குதலுக்குள்ளான போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க காவல் நிலையத்தில் போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT