Published : 01 Aug 2018 07:45 AM
Last Updated : 01 Aug 2018 07:45 AM

இடுக்கி அணை நீர்மட்டம் 2,396 அடியை எட்டியது; 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்க வாய்ப்பு: 15 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

இடுக்கி அணை நீர்மட்டம் 2,396 அடியை எட்டியதால், ஓரிரு நாளில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறக்கப்படுவதால் 15 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கேரள அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிறுதோணி என்ற இடத்தில் உள்ளது இடுக்கி அணை. ஆசியாவின் 2-வது பெரிய ஆர்ச் வடிவிலான அணை. பெரியாறு வழித்தடத்தில் உள்ள குறவன்மலை, குறத்தி மலைகளை இணைத்து 555 அடி உயரத்துக்கு ஆர்ச் வடிவில் தடுப்புச் சுவர் எழுப்பி கட்டப்பட்டுள்ளது.

60 சதுர கிமீ நீர்த்தேக்கப் பரப் பும், 72 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவை யும் கொண்டது இந்த அணை. கேரள மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திட்டமிட்டு கட்டப் பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் மூலமட்டம் என்ற இடத்தி லுள்ள நீர்மின் நிலையத்தில் உள்ள 6 ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படும். இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மின் உற்பத்திக்குப்பின் விவசாயம் உள்ளிட்ட எந்த பயன்பாட்டுக்கும் இல்லா மல், நேராக அரபிக்கடலில் கலந்துவிடும்.

இடுக்கி அணையின் சுற்றுப்பகுதி களில் பல நாட்களாக பெய்த கனமழை யால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த தால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையின் முழு கொள்ளளவு 2,403 அடி. 2,390 அடியாக உயர்ந்தபோதே முதல் வெள்ள அபாய எச்சரிக்கை (கிரீன் அலர்ட்) விடப்பட்டது. நேற்று முன் தினம் இரவில் அணையின் நீர்மட்டம் 2,395 அடியானதும் 2-ம் வெள்ள அபாய எச்சரிக்கை (ஆரஞ்ச் அலர்ட்) விடப்பட்டது. நேற்று மாலையில் அணை யின் நீர்மட்டம் 2,395.54 அடியாக உயர்ந் தது. 2,396 அடியை எட்டியதும் ரெட் அலர்ட் விடப்படும் என கேரள மின்துறை அமைச்சர் மணி தெரிவித்துள்ளார்.

2,399 அடியாக நீர்மட்டம் வந்ததும் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டு தண்ணீர் திறக்கப்படும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலான அணை என்ப தால் அதற்கு ஷட்டர்கள் கிடையாது. இந்த அணையின் உபரி நீர்வழிப் போக்கியாக திகழும் சிறுதோணி அணை வழியாக தண்ணீர் திறக்கப் படும். இந்த அணையில் 4 ஷட்டர்கள் உள்ளன. ஒவ்வொரு மதகாக, நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும்.

இதற்கு முன்னதாக 1981அக். 29ல் 11 நாட்கள், 1992 அக். 12-ல் 13 நாட்கள் என இருமுறை செறுதோணி அணை திறக்கப்பட்டுள்ளது.

சிறுதோணி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 6 மணி நேரத்தில் ஆலுவா என்ற இடத்தை அடையும். தொடர்ந்து எர்ணாகுளம் வழியாக அரபிக் கடலில் கலக்கும். வழியில் 15 மாவட்டங்களை இந்த தண்ணீர் கடந்து செல்லும். தண்ணீர் செல்லும் ஆற்றுப்பகுதியை ஒட்டி ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன.

நீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், இப்பகுதியில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு கருதி சிறுதோணி அணையில் பகலில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. புகைப் படம் எடுக்கவும் அனுமதிக்கப்படுவ தில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x