Published : 26 Aug 2018 09:40 AM
Last Updated : 26 Aug 2018 09:40 AM
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 25 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற் பட்டவை தமிழகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற் றின் வேகத்தைப் பொறுத்து ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண் டுக்கல், கோவை, திருப்பூர் மாவட் டங்களில்தான் காற்றாலைகள் உள்ளன. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அப்போது அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும்.
கடந்த ஆண்டு காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதிகபட்ச மாக சுமார் 5,100 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. இந்த ஆண்டிலும் காற்று, மழை காரணமாக சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய காற்றாலை கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘இந்து தமிழ்’ செய்தி யாளரிடம் கூறியது:
நாடு முழுவதும் 34,135 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் 8,236 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சீசன் காலங்களில் 30 முதல் 35 சதவீதத்தை காற்றா லைகள் பூர்த்தி செய்கின்றன. இங்கு சுமார் 130 துணை மின் நிலையங்களுடன் 12 ஆயிரம் காற்றாலைகள் இணைக்கப்பட் டுள்ளன. அனைத்து மின் நிலையங் களிலும் உள்ள மீட்டர்களில் ‘சிம் கார்டு’ பொருத்தியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி யாகும் மின்சாரத்தின் அளவை துல்லியமாக அளவிட முடியும்.
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை 798.30 கோடி யூனிட் மின்சாரம் காற்றா லைகள் மூலம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
காற்றாலைகள் உற்பத்தி செய் யும் மின்சாரத்தில் 80 சதவீதம் வரை தமிழக மின் வாரியத்தால் பயன்படுத்தப்படுகிறது. இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.
தேவைக்கு அதிகமாக மின் சாரத்தை உற்பத்தி செய்யும் போது, பற்றாக்குறை நிலவும் வெளி மாநிலங்களுக்கு மின் சாரத்தை விற்கலாம் எனவும் அரசுக்கு யோசனை தெரிவித் துள்ளோம். காற்றாலை மின் சாரத்தை முழுமையாகப் பயன் படுத்தும்போது, அனல் மின்சாரத் தின் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இது நிலக்கரி பற்றாக் குறை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.
நிலுவைத்தொகை வழங்கப்படுமா?
காற்றாலைகளின் மேம்பாட் டுக்கு அரசு உதவ வேண்டும். காற்றாலைகள் வழங்கும் மின் சாரத்துக்கு உரிய தொகையை, மின்சாரத் துறை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஓராண்டுவரை நிலுவை வைப்பதால் காற்றாலை உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
புதிதாக காற்றாலைகள் நிறுவ முன்வருவோரை ஊக்குவிக்க வேண்டும். இன்னும் அதிக அள வில் காற்றாலைகளை நிறுவினால், தமிழ்நாட்டின் மின் தேவையில் பெருமளவை பூர்த்தி செய்து, தொழிற் துறையினருக்கும் தடை யின்றி மின்சாரம் வழங்கலாம். உபரி மின்சாரத்தை ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் களுக்கு வழங்கி, தமிழகத்துக்கு அதிக தேவையுள்ள மார்ச், ஏப்ரல் மாதங்களில் அங்கிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள லாம்.
இதன் மூலம் ஆண்டு முழு வதும் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT