Published : 24 Jul 2018 09:23 AM
Last Updated : 24 Jul 2018 09:23 AM

மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில் தியான மண்டபத்தில் மகான்களுடன் அப்துல் கலாம் சிலை

மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில் அமைந்த தியான மண்பத்தில் 18 சித்தர்கள், மகான் களுடன் மறைந்த முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலா முக்கும் சிலை வைக்கப்பட்டுள் ளது.

படாளம் கூட்டுச் சாலை அருகே வேடந்தாங்கல் செல்லும் வழியில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமலை வையாவூர். இந்த ஊரில் சீத்தாராம சுவாமிகள் என்பவரால் அம்ருதபுரி ஸ்ரீ ராமனுஜ யோகவனம் எனும் ஆன்மிகக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்மிகக் கூடம் கோயில் போல் அல்லாமல் சர்வ சமய சமுதாய நல்லிணக்க மண்டபமாக எழுப்பப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் மதுரவல்லி தாயார் சமேத சீனுவாச பெருமாளுடன் சித்தர்கள், மகான்களுக்கும் சிலை நிறுவப்பட்டுள்ளன.

மேலும் இம்மண்டபத்தில் பாபா, வள்ளலார், திருமழிசை ஆழ் வார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோருக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளுடன் விழுப்புரம் சின்னபாபு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மஹான் படேசாயுபு சிலை யும் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலை யில் இவர்களது சிலையுடன் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கும் சிலை நிறு வப்பட்டு அவரை கவுரவித்துள் ளனர்.

இந்த தியான மண்டபத்தை யொட்டி நவக்கிரக கோயில், ஹனுமன் கோயில், கருடன் சிலை உள்ளிட்டவையும் உள்ளன.

இது குறித்து இந்த யோக வனத்தின் தலைவர் சி.எஸ்.குருபரன், செயலர் கண்ணன் ஆகியோர் கூறியதாவது:

இது கோயில் அல்ல. சர்வ சமய சமுதாய நல்லிணக்க மண்டபம். இங்கு சித்தர், மகான்களுடன் அப்துல்கலாமுக்கும் சிலை வைத்துள்ளோம். இங்கு ஒரே கல்லில் 13 அடி உயரத்தில் செதுக் கப்பட்டுள்ள நவக்கிரக விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தியான மண்டபத்தின் உள் பகுதியில் அகத்தியர், திருமூலர், ராமதேவர், கொங்கனார், சட்டைமுனி, மச்சமுனி, கருவூரார், சுந்தரானந்தர் உட்பட பல சித்தர் களுக்கும் சிலைகள் உள்ளன.

சித்தர்களுக்கும், மகான்களுக் கும் சிலைகள் உள்ள இடத்தில் அப்துல் கலாம் கர்மயோகியாக வாழந்ததால் அவருக்கும் சிலை வைத்துள்ளோம்.

இந்த யோகனவத்தின் மூலம் வையாவூரைச் சுற்றியுள்ள 70 கிராமங்களில் தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தி இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இங்குள்ள கோசாலையில் 80-க்கும் மேற்பட்ட கறவைப் பசுமாடுகள் பராமரிக்கப்படுகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த யோகவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் புது சிலைகள், தியான மண்டபக் கூடம் உருவாக்கப்பட்டு, இதன் குடமுழுக்கு விழா வரும் ஆக்ஸ்ட் 23-ம் தேதி நடைபெற உள்ளது என்றார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x